மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம் பால் யார் தெரியுமா ..? கண் கலங்க வைக்கும் அரசியல் திருப்புமுனை..!

By ezhil mozhiFirst Published Apr 11, 2019, 2:28 PM IST
Highlights

மத்திய சென்னையில் அதிமுக கூட்டணி கட்சியான பாமக சார்பில்  போட்டியிடும் வேட்பாளர் சாம் பால் யார் என்பது குறித்த விவரம்    சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய சென்னையில் அதிமுக கூட்டணி கட்சியான பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சாம் பால் யார் என்பது குறித்த விவரம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாம் பாலின் தாயார் அன்பு பால் வேலூரில் இயங்கி வரும் பிரபல தனியார் மருத்துவமனையாக சிஎம்சி மருத்துவமனையில் பயின்ற போது பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பேரன் முறையான ரவீந்தர் ராமசாமி சிறுநீரக குறைப்பாட்டால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

எவ்வளவு போராடியும் ஒரு கட்டத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ரவீந்தர். இந்த நிகழ்வின் போது, தன் சகோதரனை போன்று பழகி வந்த ரவீந்தருக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்து உள்ளார் மருத்துவர் அன்பு பால்.

அதாவது " எனக்கு ஒரு மகன் பிறந்தால் அவனுக்கு உங்கள் பெயர் தான் வைப்பேன் " என... சொன்னது போலவே, இவரின் மகனுக்கு பின்னாளில் சாம் ரவி என பெயர் சூட்டி உள்ளார் அன்பு பால்.

வேலூரில் பிரபல மருத்துவரான இவர், தற்போது மத்திய சென்னை வேட்பாளரான தனது மகன் சாம் பாலுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் தான், ரவீந்தர் ராமசாமிக்கு தான் செய்து கொடுத்த சத்தியம் பற்றியும், தன் மகனுக்கு சாம் ரவி பெயர் வைக்க காரணம் என்ன என்பதையும் விளக்கும் வண்ணம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில், 

"முதலில் எல்லாம் வல்ல இறைவனுக்கு அவர் எங்கள் மேல் குறிப்பாக என் மகன் சாம் பால் மீது பொழியும் கருணைக்காக நன்றிகளை உரித்தாக்குகிறேன். என் மகனை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக தேர்ந்தெடுத்தமைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்கள் திரு ராமதாஸ் அவர்களுக்கும் திரு அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெரியார் ஈ. வெ.ராமசாமி அவர்களுக்கு பேரன் முறையான ரவீந்தர் ராமசாமி எனக்கு ஒரு சகோதரனை விட உயர்வான இடத்தில் இருந்தார். நான் வேலூர் சிஎம்சியில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த வேலையில் ரவீந்தர் ராமசாமி சிறுநீரக குறைபாட்டால் மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது என் அன்புத் தம்பி ரவீந்தரிடம் எனக்கு ஒரு மகன் பிறந்தால் அவனுக்கு உன்னுடைய பெயரைத்தான் வைப்பேன் என உருக்கத்துடன் கூறினேன். ரவீந்தரின் உயிர் எண் என் கண்முன்னே பிரிந்தது. அவருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை என் மகனுக்கு சாம்ரவி என பெயர் வைத்ததன் மூலம் நிறைவேற்றினேன்.

எனக்கு நன்றாக தெரியும் என் மகன் துன்பப்படுகிறவர்களின் துயரங்களை போக்க தன்னால் என்னவெல்லாம் முடியுமோ அதை எல்லாம் செய்வான். அவன் இதுவரை உதவி தேவைப்படும் எந்த மனிதனையும் உதாசீனப்படுத்தியது இல்லை" - டாக்டர் அன்பு பால், எம்பி பிஎஸ். இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. 

டாக்டர் அன்பு பாலும், மருத்துவர் ராமதாசும் ஒன்றாக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் பாலுக்கு எதிராக திமுக சார்பில் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார் என்பது கூடுதல் தகவல். 

click me!