என் ரேஞ்செல்லாம் "சீப்மினிஸ்டர்"..! இவங்கெல்லாம் ஜுஜுபி...மாஸ் காட்டும் துரைமுருகன்..!

 
Published : Jun 21, 2018, 07:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
என் ரேஞ்செல்லாம் "சீப்மினிஸ்டர்"..! இவங்கெல்லாம் ஜுஜுபி...மாஸ் காட்டும் துரைமுருகன்..!

சுருக்கம்

durai murugan reacted to os maniyan in comedy nature

என் ரேஞ்செல்லாம் "சீப்மினிஸ்டர்"..! இவங்கெல்லாம் ஜுஜுபி...மாஸ் காட்டும் துரைமுருகன்..!

காவிரி விவகாரத்தில் திமுக  தான் தவறு செய்து விட்டது என வம்புக்கு   இழுத்த  முதல்வர் எடப்பாடிக்கு  பதில் அளிக்கும்  விதமாக, நேருக்கு நேர் விவாதிக்க தயார் என திமுக  துணை  தலைவர் துரைமுருகன் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, கைத்தறி துறை அமைச்சர் ஓஎஸ் மணியன்....

"எந்த நாள் எந்த மேடையில், எந்த நேரத்திற்கு என்று அவரை ( துரை முருகன்) சொல்ல சொலுங்கள்..காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்" என தெரிவித்து  இருந்தார்.

இதற்கு சவால் விட்டு பேசிய துரைமுருகன் என்ன சொல்லி இருக்கிறார்  தெரியுமா..? 

"காவிரி விவகாரம் குறித்து பேசுவதற்கு தயார் என நான் எடப்பாடியை  அதாவது முதலமைச்சரை கேள்வி கேட்கிறேன்.....

அதற்கு அவரே பதில் கூறாமல் அமைதியாக இருக்கிறார்.....இவர் என்னமோ .. பதில் கூற நான் தயார் பதில் கூற நான் தயார் என " அழைப்பே இல்லாமல் ஆஜாராகிறார்  ஓ. எஸ். மணியன்  என அசால்டாக பதில் கூறி உள்ளார்  துரை முருகன்...

"என் ரேஞ்சு எல்லாம் சீப் மினிஸ்டர்"

மேலும் இது குறித்து தெரிவிக்கும் போது, "என் ரேஞ்சு எல்லாம் சீப் மினிஸ்டர்"...சின்ன சின்ன பொடிசுக்கெல்லாம் நான் பதில் கூற முடியாது....

ஊர்ல பெரிய  மனுஷனை  பார்க்க  சென்றால், இடையில் உள்ளவர்கள் " என்ன  விஷயமாக  வந்தீங்க..? என்கிட்டே சொல்லுங்க...என்கிட்டே சொல்லுங்கனு வடிவேலு   மாதிரி,..."பதில் கூற நான் தயார்...நான் தயார் என ஓ.எஸ். மணியன் சொல்றாரு என துரை முருகன்  கிண்டலாக தெரிவித்து உள்ளார்

இவர்கள் இருவரும் சவால் மேல் சவால் விட்டு பேசி வருவதை அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!