MGR : எம்ஜிஆர் நினைவிடம் செல்ல.. சசிகலா, டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுப்பு..

By Raghupati RFirst Published Dec 24, 2021, 8:46 AM IST
Highlights

எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இன்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் சென்னையில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பதால் காவல்துறையினர் வழங்கிய அனுமதியை ரத்து செய்துள்ளனர்.

இந்நிலையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சசிகலாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  கொரோனா  காரணமாக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதால் தொண்டர்கள் அவரவர் பகுதிகளிலேயே அஞ்சலி செலுத்த சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதேபோல்,  ‘சமூக பொறுப்புமிக்க அரசியல் இயக்கமாக பொதுமக்களிடையே நோய் பரவல் ஏற்பட காரணமாகி விடக்கூடாது என்கின்ற அக்கறையோடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி’ செலுத்த உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

மேலும்,  நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து புறப்படவிருந்த கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் சென்னைக்கு வராமல் அவரவர் ஊர்களில் புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்தினை வைத்து இதய அஞ்சலியைச் செலுத்த வேண்டும் என்றும் தினகரன் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

click me!