மோடியை 3 முறை சந்தித்த பவர் செண்டர் தங்கமணியும் நீக்கம்..!! - திணறடிக்கும் டிடிவி தினகரன்...!!!

 
Published : Aug 28, 2017, 10:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
மோடியை 3 முறை சந்தித்த பவர் செண்டர் தங்கமணியும் நீக்கம்..!! - திணறடிக்கும் டிடிவி தினகரன்...!!!

சுருக்கம்

Dtivi Dinakaran has strongly dismissed minister Thamamani from the appointment of the AIADMK secretary in Namakkal district.

அமைச்சர் தங்கமணியை நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

இரு அணிகளாக பிரிந்து இருந்த அதிமுக சசிகலாவை கட்சியில் நீக்குவதாக எடப்பாடி உறுதியளித்ததின் பேரில் ஒன்றாக இணைந்தது. ஆனால் இதற்கு டிடிவி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து தற்போது புதுச்சேரியில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். 

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி மேல் இருந்த நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார் என்றும் எனவே அவரை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் ஆளுநரை சந்தித்து டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் கடிதம் அளித்தனர். 

ஆனால் இதுவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் எந்த முடிவையும் எடுத்ததாக தெரியவில்லை. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருகின்றார். 

இதனிடையே டிடிவி தினகரன் சசிகலாவின் பெயரை சொல்லி எடப்பாடி ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றார். 

ஏன் சேலம் மாவட்ட பொறுப்பில் இருந்து எடப்பாடியையே நீக்குவதாக அறிவித்துள்ளார். அந்த வரிசையில் தற்போது, அமைச்சர் தங்கமணியை நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!
தவெகவுடன் கூட்டணிக்கு தவமிருக்கும் அதிமுக.. விஜய் போட்ட ஒரே நிபந்தனை... டரியலாகும் இபிஎஸ்..!