அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பதவியிலிருந்து துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமனை நீக்கி டிடிவி தினகரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு ஜி.செந்தமிழனை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், திருவண்ணாமலை வடக்கு அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து தூசி மோகனை நீக்கம் செய்து அந்த இடத்திற்கு சி. ஏழுமலையை நியமனம் செய்துள்ளார்.
ஒபிஎஸ்சும் இபிஎஸ்சும் ஒன்றாக இணைந்ததிலிருந்து டிடிவி தினகரன் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
எடப்பாடிக்கு எதிராக 20 எம்.எல்.ஏக்களை திரட்டி ஆட்சியை கலைக்க போவதாக மிரட்டி வருகிறார். அதற்கு பதிலடியாக எடப்பாடியும் ஈடுகொடுத்து செயலாற்றி வருகின்றார்.
தினகரனையும் சசிகலாவையும் பொதுக்குழு கூட்டி நீக்கம் செய்வதாகவும் டிடிவி தினகரன் செய்யும் நியமனங்கள் எதுவும் செல்லாது எனவும் தெரிவித்தார் எடப்பாடி.
இதைதொடர்ந்து டிடிவி தினகரன் நாங்களே உண்மையான அதிமுக கட்சி என கூறி எடப்பாடி தரப்பு நிர்வாகிகளை நீக்கம் செய்து அவரது தரப்பு நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார்.
அந்தவகையில், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பதவியிலிருந்து துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமனை நீக்கி டிடிவி தினகரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.