நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா ? வெளில சொல்லிக்காத …. முன்னாள் முதலமைச்சரை நார் நாராய் கிழித்தெடுத்த ராமதாஸ் !!

First Published Jul 12, 2018, 12:25 PM IST
Highlights
Dr.Ramadoss vs ediyurappa cauvery eater issue


கர்நாடகத்தில் உருவாகும் நீரை கர்நாடகமே பயன்படுத்தும் வகையில் புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டும்  என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா  தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் , கர்நாடகாவில்  அனைத்து அணைகளையும் மூடி காவிரி ஆற்றில் வரும் வௌ்ளத்தை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

தற்போது கர்நாடகாவில் தென் மேற்கு பருவமழை கொட்டி வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு உள்ளிட்ட பகுதிகளில்  பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து கபினி அணைக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்த அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் காவிரியில் திறந்துவிடப்படுகிறது.

இதே போன்று கேஆர்எஸ் அணையில் நீர் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்னும் 7 அடி உயர்ந்தால் அந்த அணையும் முழுக் கொள்ளளவை எட்டிவிடும் .எனவே அங்கிருந்தும் 5 ஆயிரம் அடி கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. கிட்டத்தட்ட 55 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரி மூலம் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால் வயிற்றெரிச்சல் ஆன கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடகாவில் உருவாகும் தண்ணீர் அனைத்தையும் கர்நாடக மாநிலமே  பயன்படுத்தும் வழிமுறையை உருவாக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்திருந்தார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">கர்நாடகத்தில் உருவாகும் தண்ணீரை கர்நாடகமே பயன்படுத்திக் கொள்ள வகை செய்ய வேண்டும்: எடியூரப்பா - இந்த பெரிய மனிதன் ஆட்சிக்கு வந்திருந்தால் தான் தமிழகத்துக்கு தடையில்லாமல் காவிரி தண்ணீர் கொடுத்திருப்பாராம்!</p>&mdash; Dr S RAMADOSS (@drramadoss) <a href="">July 12, 2018</a></blockquote>

<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

எடியூரப்பாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்த பெரிய மனுஷன் தான் தான்  ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழகத்துக்கு தடையில்லாமல் காவிரி தண்ணீர் கொடுத்திருப்பாராம் என கிண்டல் செய்துள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">கர்நாடகத்தில் உருவாகும் தண்ணீரை கர்நாடகமே பயன்படுத்திக் கொள்ள வகை செய்ய வேண்டும்: எடியூரப்பா - இப்போது கூட ஒன்னும் பிரச்சினை இல்லை. கர்நாடக அணைகள் அனைத்தையும் மூடி  காவிரி ஆற்றில் வரும் வெள்ளத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!</p>&mdash; Dr S RAMADOSS (@drramadoss) <a href="">July 12, 2018</a></blockquote>

<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

வேண்டும் என்றால் கர்நாடகாவில்  உள்ள அனைத்து அணைகளையும் மூடி காவிரி ஆற்றில் வரும் வௌ்ளத்தை நீங்களே வைத்து கொள்ளுங்களேன் என்றும் டாக்டர் ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

click me!