ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வராமலேயே ஓட்டுநர் உரிமம்.. அமைச்சர் ராஜகண்ணப்பன் சொன்ன குட்நியூஸ்.!

Published : Sep 09, 2021, 01:27 PM IST
ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வராமலேயே ஓட்டுநர் உரிமம்.. அமைச்சர் ராஜகண்ணப்பன் சொன்ன குட்நியூஸ்.!

சுருக்கம்

போக்குவரத்து துறையிலுள்ள ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார். விபத்தின்றி பணிபுரியும் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களை ஊக்குவிப்பதற்காக முதல்வர் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படும்.

விபத்தின்றி பணிபுரியும் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களை ஊக்குவிப்பதற்காக முதல்வர் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில்;- பொதுமக்கள் ஓட்டுனர் உரிமங்களை ஆதார் மூலம் ஆன்லைன் வழியாக பெறும் வகையில் வசதி செய்து தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆர்டிஓ அலுவலகம் வராமலேயே ஆதார் மூலம் ஆன்லைனில் சேவைகளை பெற ஏற்பாடு செய்யப்படும்.

அதுமட்டுமல்லாமல் போக்குவரத்து துறையிலுள்ள ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார். விபத்தின்றி பணிபுரியும் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களை ஊக்குவிப்பதற்காக முதல்வர் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படும்.  அரசு போக்குவரத்து கழகங்களில் கூடுதல் வருவாய்க்காக பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள் அதாவது போக்குவரத்து துறை சார்பாக 10 இடங்களில் பெட்ரோல், டீசல் பங்குகள் தொடங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார். 

மேலும், அரசு போக்குவரத்து கழகங்கள் எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த, பழைய பேருந்துக்கு பதிலாக புதிய பேருந்துகளை வாங்குவதற்கு ஜெர்மன் நிதி நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி 12,000 பி.எஸ்.-6 ரக பஸ்கள் மற்றும் 2000 மின்சார பேருந்துகள் இந்த ஆண்டு முதல் 5 ஆண்டு காலங்களில் கொள்முதல் செய்யப்படும் என்றார்.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!