கள் போதைப்பொருளா ? நாங்க ரெடி.. நீங்க ரெடியா.. முதல்வருக்கு சவால் விடும் நல்லசாமி

By Raghupati RFirst Published Jan 2, 2022, 7:18 AM IST
Highlights

கள் போதைப்பொருளா ? விவாதிக்க நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா என்று முதல்வருக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் கள் இயக்கத்தின் மாநில தலைவர் நல்லசாமி.

கள் இயக்கத்தின் சார்பில் திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் மாநில தலைவர் நல்லசாமி தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின்போது பேட்டி அளித்த மாநில தலைவர் நல்லசாமி, ‘கள் ஒரு உணவுப்பொருள் இதனை போதைப் பொருள் என நிரூபித்தால் ரூபாய் 10கோடி அளிக்க தயாராக இருக்கிறோம். அதற்காக பிரச்சார நாட்காட்டி வெளியிட்டு அதற்கான கை பிரதியும் வெளியிட்டுள்ளோம்.

தொடர்ந்து வரும் 21ம் தேதி தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்த உள்ளோம் தமிழக அரசு இதை தடுத்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தார். மேலும்,  கள் போதை பொருள் என நேருக்கு நேராக எங்களுடன் வாதிக்க முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், மற்றும் இன்றைய முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆகியோருடன் விவாதம் செய்ய தயாராக இருக்கிறோம் எனக் கூறினார்.

இந்தோனேசியா மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி 35 ரூபாய் மானியம் கொடுக்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாங்கப்படும் உணவு எண்ணெய்களுக்கு மானியம் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும். அப்படி மானியம் கொடுப்பதால் கொப்பரைதேங்காய், எள், உள்ளிட்டவை களுக்கான விலை குறைந்து அவற்றின் காரணமாக விவசாயிகள் நிலை பாதிக்கும். 

எனவே, மத்திய அரசு உடனடியாக வெளிநாட்டு எண்ணைகளுக்கான மானியம் கொடுப்பதையும், நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்வதும் தடுக்க வேண்டும். இல்லை என்றால் நியாயவிலைக் கடைகளை அடித்து உடைக்கும் நாள் வரும்’ என்று கூறினார்.

click me!