இப்படி இழுத்தடித்து ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? முதல்வர் ஸ்டாலினை வச்சு செய்யும் டிடிவி.தினகரன்..!

By vinoth kumar  |  First Published Jun 28, 2022, 2:00 PM IST

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தக் கட்ட போராட்டத்தை மேற்கொள்ள இருக்கும் சூழலில், அவர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தமிழக அரசு முன் வர வேண்டும். 


வாக்குறுதி கொடுத்த ஸ்டாலின் முதலமைச்சராகி ஓராண்டு ஆன பின்னும் அதனை நிறைவேற்றாமல் இருப்பது நம்பிக்கை துரோகமாகும் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். 

ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் நீண்ட நாளாக  கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  அத்துடன் பணி உயர்வுக்கான அரசாணை 354-யை அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்து புறக்கணித்தால் போராட்டம் நடத்தப்படும்  என்று  தஞ்சை மருத்துவக்கல்லூரி கூட்ட அரங்கில் அரசு மருத்துவர்கள் சங்கம் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் 35-வது செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், அரசு மருத்துவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பதுதான் திராவிட மாடலா? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அப்படியே ஊழலை ஒழிக்கிற உத்தம மாதிரி மேடைக்கு மேடைக்கு பேசினீங்க.. என்ன ஆச்சு? ஆளுங்கட்சியை அலறவிடும் TTV.!

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தக் கட்ட போராட்டத்தை மேற்கொள்ள இருக்கும் சூழலில், அவர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தமிழக அரசு முன் வர வேண்டும். 

இதையும் படிங்க;- எஸ்.பி.வேலுமணிக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்..!

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு மருத்துவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்து, ‘ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என்று வாக்குறுதி கொடுத்த திரு.ஸ்டாலின் முதலமைச்சராகி ஓராண்டு ஆன பின்னும் அதனை நிறைவேற்றாமல் இருப்பது நம்பிக்கை துரோகமாகும். 

இதையும் படிங்க;- பாயிண்டை பிடித்த புகழேந்தி.. சி.வி.சண்முகத்தின் அடி மடியிலேயே கை வைத்ததால் அதிர்ச்சி..!

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலையில், அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஏழை, எளிய மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள். அரசு மருத்துவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மனசாட்சியோடு நிறைவேற்றாமல் இழுத்தடித்து ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!