சீனாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தியது எப்படி..? பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வியப்பு!

By Asianet TamilFirst Published Jul 10, 2020, 9:53 PM IST
Highlights

“உலகில் சீனாவில்தான் கொரோனா முதலில் தாக்கியது என்றாலும் வூபெய் மாகாணத்தை தாண்டாமலும், ஷாங்காய், பீஜிங் நகரங்களை அதிகம் பாதிக்காமலும்  140 கோடி  மக்கள்தொகை  கொண்ட சீனா கட்டுப்படுத்தியது எப்படி? 3 மாதங்களாகியும் விடை தெரியாமல் நான் வியக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று!” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுபடுத்தியதற்கு விடை கிடைக்காமல் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வியப்பு தெரிவித்துள்ளார்.
உலகையோ அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் வூஹான் நகரில் தோன்றியது. அந்த ஊரில் வேகமாகப் பரவிய கொரோன வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது சீன அரசு. முழுமையான ஊரடங்கு உத்தரவு, சமூக விலகல் உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்றியது சீனா. தொடக்கத்தில் சீனாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவியது. மரணங்களும் வேகமாக நிகழ்ந்தன. இருந்தபோதும் கொரோனா வைரஸை அந்த ஊரை விட்டு மற்ற பகுதிகளில் பரவவில்லை. இதனால், வூஹானில் விரைவில் கொரோனா வைரஸை சீன அரசு கட்டுபடுத்தியது.


சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் லட்சகணக்கானோரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவில் இன்று 90 ஆயிரத்துக்கும் குறைவாகவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸை சீனா கட்டுப்படுத்தியதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வியப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “உலகில் சீனாவில்தான் கொரோனா முதலில் தாக்கியது என்றாலும் வூபெய் மாகாணத்தை தாண்டாமலும், ஷாங்காய், பீஜிங் நகரங்களை அதிகம் பாதிக்காமலும்  140 கோடி  மக்கள்தொகை  கொண்ட சீனா கட்டுப்படுத்தியது எப்படி? 3 மாதங்களாகியும் விடை தெரியாமல் நான் வியக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று!” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!