நயவஞ்சகன், கோபயபல்ஸ், புளுகுமூட்டை வியாபாரி: ஸ்டாலினை சரமாரி தாக்கும் ராமதாஸ்.

By Vishnu PriyaFirst Published Oct 26, 2019, 4:36 PM IST
Highlights

’பல வகைகளில்’ தங்களின் எதிரியாக இருக்கும் திருமாவளவனை கூட டாக்டர். ராமதாஸ் இப்போதெல்லாம் கண்டுகொள்வதில்லை. ஆனால், மு.க.ஸ்டாலினைத்தான் கண்டபடி திட்டித் தாளித்துக் கொண்டிருக்கிறார் மனிதர். நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினின் வெற்றியை ‘புளுகு மூட்டைகளை விற்று கிடைத்த வெற்றி’ என்றால், முரசொலி அலுவலகம் என்பது அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலம்! என்று புது பிரளயத்தை கிளப்பினார்.

’பல வகைகளில்’ தங்களின் எதிரியாக இருக்கும் திருமாவளவனை கூட டாக்டர். ராமதாஸ் இப்போதெல்லாம் கண்டுகொள்வதில்லை. ஆனால், மு.க.ஸ்டாலினைத்தான் கண்டபடி திட்டித் தாளித்துக் கொண்டிருக்கிறார் மனிதர். நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினின் வெற்றியை ‘புளுகு மூட்டைகளை விற்று கிடைத்த வெற்றி’ என்றால், முரசொலி அலுவலகம் என்பது அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலம்! என்று புது பிரளயத்தை கிளப்பினார். அந்த வகையில் வன்னியர்கள் அதிகமிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கும் தோல்வியை, என்னமோ அன்புமணியே சி.எம்.ஆகிவிட்டது போல் கொண்டாடுகிறார் ராமதாஸ். அ.தி.மு.க. வெற்றி முகம்! என தகவல் வர துவங்கிய நொடியில் இருந்தே அவரது போக்கும் தி.மு.க.வை போட்டுப் பொளப்பதாக மாறிவிட்டது. 
அந்த வகையில், இன்று பிற்பகலில் இது பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். ‘விக்கிரவாண்டி மக்கள் புகட்டிய பாடமும்! ஸ்டாலின் கற்க மறுக்கும் படிப்பினையும்’ என்றும் பெயரில் ச்சுமா தி.மு.க. தலைவரை திணறத் திணற அடித்திருக்கிறார் டாக்டர். 


அதன் ஹைலைட் பாயிண்ட்கள் இதோ....
*    அகங்காரம் கொண்டு தவறான பாதையில் செல்லும் மனிதர்களுக்கு, எதார்த்தத்தை புரிய வைக்க உதவுவது தோல்விகள் கொடுக்கும் படிப்பினைகளும், அனுபவங்களும்தான். ஆனால், விக்கிரவாண்டி தேர்தல் படுதோல்வி குறித்து மு.க.ஸ்டாலின் கூறியுள்ள  கருத்துக்கள், அவர் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது. 
*    சில கட்சிகள் திட்டமிட்டு கிளப்பிய சாதி உணர்வுதான் தி.மு.க.வின் தோல்விக்கு காரணம்! என்று கூறியுள்ளார். புளுகு மூட்டைகளின் மொத்த வணிகரான அவரிடமிருந்து வந்துள்ள புதிய பொய் இது. 
*    அரசியல் சூழலை கவனித்து வரும் எல்லோருக்கும் சாதி உணர்வை திட்டமிட்டு கிளப்பிய சந்தர்ப்பவாதிகள் யார்? என்பது நன்றாகத் தெரியும். 
*    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க.வின் பரப்புரையானது...அ.தி.மு.க. மற்றும் பா.ம.க.வின் கடந்த கால சாதனைகளை விளக்கியும், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் இனி என்னென்ன நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும்! என்பது பற்றி மட்டுமேதான் இருந்தது. 
*    மக்கள் மனது எங்கள் கூட்டணியை விரும்புவதையும், தி.மு.க.வுக்கு எதிராக வெறுப்பு அலை வீசுவதையும் கண்ட ஸ்டாலின்,  கடந்த 7-ம் தேதியன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் பல பொய்களை கூறி, வன்னிய மக்களை ஏமாற்ற முனைந்திருந்தார். 


*    என்னமோ வன்னிய சமுதாயமே தி.மு.க.விடம் மண்டியிட்டு யாசகம் பெற்றது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்த  ஸ்டாலின் முயன்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவரது அரைவேக்காட்டு அறிக்கைக்கு ஆதாரத்துடன் பதில் அளித்தேன். 
*    தி.மு.க.வின் அரசியல் வளர்ச்சி என்பது வன்னிய மக்கள் போட்ட பிச்சை. 
*    பல தேர்தல்களில் தி.மு.க.வை தூக்கிப் பிடித்து வெற்றி பெற வைத்தவை வன்னியர் பூமிதான். 
*    ஆனால் இதற்கெல்லாம் கைமாறாக தி.மு.க.வோ வன்னியர்களுக்கு செய்தது, துரோகம்,  துரோகம், துரோகம் மட்டுமே. 
*    இத்தனைக்குப் பிறகும் வன்னிய மக்களின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் செயல்படும்போது அதை எப்படி என்னால் தட்டிக் கேட்காமல் இருக்க முடியும்?


*    இலங்கையில் பண்டார வன்னியனுக்கு எதிராக எப்படி காக்கை வன்னியன் பயன்படுத்தப்பட்டானோ அதேபோல் விக்கிரவாண்டி தேர்தல் களஹ்ட்தில் பாட்டாளி மக்கள் கட்சியையும், என்னையையும் வீழ்த்துவதற்காக இங்குள்ள சில வன்னியர்களை மு.க.ஸ்டாலின் களமிறக்கினார். 
*    கொள்கை பேசவேண்டிய பிரசார மேடைகளில் அந்த நபர்கள் கோயபல்ஸ் பிரசாரத்தை நடத்தினார்கள். 
*    வன்னியர்களின் வாக்குகளைப் பெற மு.க.ஸ்டாலின் செய்தது சாதி அரசியலா? அல்லது அதை முறியடிக்க பா.ம.க. செய்தது சாதி அரசியலா? என்பது வல்லுநர்களுக்கு தெரியும். 
*    மக்கள் வீரனுக்குதான் மகுடம் சூட்டுவார்கள். நயவஞ்சகனை நெருங்ககூட விடமாட்டார்கள். அந்த வகையில் தான் விக்கிரவாண்டியிலும், நாங்குநேரியிலும் தி.மு.க.வுக்கு தோல்வியை பரிசாக தந்துள்ளனர். ...............என்று வெளுத்தெடுத்துள்ளார் . 
ராமதாஸ் இந்தளவுக்கு ஸ்டாலின் மீது பாய, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்ததும் ’வெட்கமில்லையா? ரோஷமில்லையா?’ என்று ஸ்டாலின் வெளுத்துவாங்கி அசிங்கப்படுத்தியதே காரணம். அந்தப் புண் இன்னும் ஆறவில்லையாம் டாக்டருக்கு. 
ஹும்! டாக்டருக்கே புண் ஆறலேன்னா எப்படி?

click me!