எடப்பாடியார் துறையை இடித்துத் தள்ளிய அமைச்சர்: கோட்டைக்குள் வெடிக்குது மோதல் பட்டாசு!

By Vishnu PriyaFirst Published Oct 26, 2019, 4:31 PM IST
Highlights

சசிகலாவுக்கு எதுவெல்லாம் ஆகாதோ அதையெல்லாம் தேடிப் பிடித்து ரசிப்பதுதான் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். டீம் தலைமையில் நடக்கும் தலயாய பணி. ஆனால், ஒரேயொரு நபர் விஷயத்தில் மட்டும் இது தலைகீழாக போயிருக்கிறது. அது...’அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்’ விவகாரத்தில். 

சசிகலாவுக்கு எதுவெல்லாம் ஆகாதோ அதையெல்லாம் தேடிப் பிடித்து ரசிப்பதுதான் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். டீம் தலைமையில் நடக்கும் தலயாய பணி. ஆனால், ஒரேயொரு நபர் விஷயத்தில் மட்டும் இது தலைகீழாக போயிருக்கிறது. அது...’அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்’ விவகாரத்தில். ஆம் சசிகலா டீமுக்கு சுத்தமாக செங்கோட்டையனை ஆகாது. அவரது சின்ன சின்ன தவறுகளையும் கூட பூதாகரமாக ஊதிப் பெரிதாக்கி, ஜெயலலிதாவிடம் போட்டுக் கொடுத்து பதவியிலிருந்து தூக்கிவிடுவார்கள். அதனால்தான் 2011-ல் ஜெயலலிதா ஆட்சி அமைந்தபோது அமைச்சராகி, பின் சில காலத்திலேயே பதவியை இழந்த செங்கோட்டையனால் மேல் எழுந்து வரவே முடியவில்லை. 2011ல் மீண்டும் ஆட்சி அமைகையிலும் அவருக்கு அமைச்சரவையில் இடமில்லை. இதற்கெல்லாம் ஒரே காரணம், சசிகலாதான். 


ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சிக்குள் களேபரமேற்பட்ட நிலையில், வேறு வழியில்லாமல்...செங்கோட்டையனின் சாணக்கியத்தனத்தை பயன்படுத்துவதற்காகவே அவரை அமைச்சரவையில் சேர்த்தார் சசிகலா.அப்போதும் அவரை முதல்வராகவிடவில்லை. இப்படி சசிகலா டீமினால் தாறுமாறாக சேதாரம் செய்யப்பட்ட செங்கோட்டையனை ஏனோ இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். டீமுக்கும் ஆகவில்லை. அதனால்தான் ‘பள்ளி கல்வித்துறை’ எனும் ஒன்றை வைத்துக் கொண்டு தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார். யாரோடும், எதோடும் கலப்பதில்லை. விடிந்தால் ஒரு திட்டம், கருக்கையில் ஒரு அறிவிப்பு, இரவில் ஒரு  சுற்றரிக்கை என்று அக்கல்வித்துறையில் என்னென்னவோ செய்து  கொண்டிருக்கிறார். ஏகப்பட்ட எதிர்ப்புகளை அவர் சம்பாதித்தாலும் இ.பி.எஸ்., ஏன்? என்று கேட்பதில்லை. எக்கச்சக்க பாராட்டுதல்களை சம்பாதித்தாலும் ‘எப்படி?’ என்றும் கேட்பதில்லை. அவரை யாரும் சீண்டுவதே இல்லை. முதல்வராகவும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் இ.பி.எஸ். தன்னை எந்த கேள்வியும் கேட்டு, குடைச்சல் ஏதும் கொடுக்காத நிலையில், செங்கோட்டையனே வான் டட் ஆக முதல்வர் துறையில் முறைகேடுகள் நடப்பதாக வம்பிழுத்திருக்கிறார், அதுவும் பொது நிகழ்வில், மைக்கில் என்பதுதான் அ.தி.மு.க.வை அலறவும், தி.மு.க.வை சந்தோஷத்தில் திணறவும் வைத்துள்ளது. 
எங்கே நடந்தது இந்த சம்பவம்?....


கடந்த 23-ம் தேதியன்று சென்னையில் விளையாட்டுத்துறை சார்பாக அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடத்தில் உள்ள கூட்ட அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஒரு ஆலோசனை நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அதில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று இருக்கிறார். அப்போது, விளையாட்டு கழக நிர்வாகிகள் ‘ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறக்கூடிய அளவில், பத்துக் கோடி மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கம் அமைக்க நாங்களே நிதி உதவி செய்கிறோம்.’ என்று சொன்னார்கள். உடனே அமைச்சர் செங்கோட்டையனோ “அரசு அதனை எடுத்து நடத்தினால் பொதுப்பணித்துறை காண்ட்ராக்ட் என்று பலரை சரி கட்ட வேண்டியிருக்கும். அதனால் நீங்களே அதனை எடுத்துச் செய்யுங்கள்.” என்று ஒரே போடாக போட, அங்கிருந்த ஆளும் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சி. காரணம்? பொதுப்பணித்துறை என்பது முதல்வர் எடப்பாடியாரின்  கையிலிருக்கும் முக்கிய துறைகளில் ஒன்று.  அதிர்ந்த அ.தி.மு.க.வினர் “முதல்வர் இ.பி.எஸ்.ஸின் கையிலுள்ள முக்கிய துறையையே இந்த இடி இடிச்சுட்டாரே செங்கோட்டையன். என்னமோ அந்த துறையில் நடக்கும் மக்கள் நல பணிகளில் காண்ட்ராக்ட் ரீதியில் பலர் சரிகட்டப்படுவதும், கமிஷன்கள் பரிமாறப்படுவதும், அட்ஜெஸ்ட்மெண்டுகள் நடப்பதுமாக இருக்குதுங்கிற மாதிரி பேசியிருக்கிறாரே? ஒரு அமைச்சராக இருந்து கொண்டு, ஆட்சியை அசிங்கப்படுத்திட்டார்.” என்று புழுங்கித் தள்ளிவிட்டனர். 
விவகாரம் இ.பி.எஸ்.ஸின் கவனத்துக்குப் போக, அவரின் முகம் இறுகிவிட்டதாம். 


ஏற்கனவே கொங்கு அமைச்சர்களில் செங்கோட்டையன் தனி ஆவர்த்தனம் பண்ணுகிறார்! என்று விமர்சிக்கப்பட்ட நிலையில், இந்த சீண்டல் பேச்சினால் எந்த நொடியிலும் அமைச்சருக்கும், முதல்வருக்கும் இடையில் மோதல் வெடிக்கலாம்! என்கிறார்கள். 
அதுவும் சர்தான்!

click me!