புள்ளிமான் வேட்டையில் சிக்கிய புலி : தாமாக வந்து தலையை கொடுத்த கைரேகை டாக்டர் பாலாஜி!

 
Published : Apr 10, 2017, 05:36 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
புள்ளிமான் வேட்டையில் சிக்கிய புலி : தாமாக வந்து தலையை கொடுத்த கைரேகை டாக்டர் பாலாஜி!

சுருக்கம்

dr balaji caught in income tax issue

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்திய வருமான வரி சோதனையில், சிக்கிய ஆவணங்களில், ஜெயலலிதா கைரேகைக்கு அத்தாட்சி வழங்கிய டாக்டர் பாலாஜிக்கு ரூ.5 லட்சம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதெல்லாம் சுத்த பொய் என்று இதுவரை கூறி வந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால், அவர் பணம் கொடுத்தது உண்மைதான், அது லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் அல்ல, டாக்டர் பீலே சென்னை வந்தபோது, ஹோட்டலில் தங்குவதற்காக கொடுக்கப்பட்ட பணம் என்று, டாக்டர் பாலாஜி உளறிக்கொட்டி விட்டார்.

ஆக, டாக்டர் பாலாஜிக்கு பணம் கொடுக்கப்பட்டது உண்மை என்பதை, அவரே ஒப்புக்கொண்டுள்ளார். கொடுக்கப்பட்டதற்கான காரணத்தைதான் மாற்றி கூறியுள்ளார். இதனால், அந்த தகவலே பொய் என்று கூறிய விஜயபாஸ்கரின் பதில் பொய் என்பது இதன்மூலம் உறுதியாகி உள்ளது.

ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களை திரட்டுவதற்காகவே, வருமான வரி துறை சார்பில், அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளிட்ட சிலரது வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

ஆனால், அதில் டாக்டர் பாலாஜியின் பெயர் இடம் பெற்றிருந்ததும், அதற்கு அவர் கொடுத்த விளக்கமும், ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பி.எஸ் உள்ளிட்ட எதிர் அணியினர், எழுப்பி வரும் சந்தேககங்களை உறுதிப்படுத்தி உள்ளது.

ஆகவே, டாக்டர் பாலாஜி கூறிய பதிலின் அடிப்படியில், ஜெயலலிதாவிடம் பெறப்பட்ட கைரேகை, மற்றும் அவரது மரணம் தொடர்பான மர்மங்கள் குறித்த விசாரணை, இனி தீவிரப்படுத்தப் படும் நிலை உருவாகி உள்ளது.

வருமான வரித்துறை நடத்திய, புள்ளிமான் வேட்டையில் புலியாக தாமாக வந்து சிக்கி, தினகரனுக்கும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் மேலும் சிக்கலை உருவாக்கிய டாக்டர் மீது, சசிகலா தரப்பினர் கடும் கோபத்தில் உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!