குருவிற்கு என்ன நடந்தது? சிகிச்சையை தடுத்தது யார்? முதல்முறையாக வாய்திறந்த அன்புமணி!

By sathish kFirst Published Dec 14, 2018, 9:10 AM IST
Highlights

குருவை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தோம், அவரிடம் பாஸ்போர்ட் இல்லை. நானும் பாஸ்போர்ட் வாங்கச் சொல்லி பல முறை கூறிவிட்டேன். பல முயற்சிகளுக்குப் பிறகு ஒருவழியாக பாஸ்போர்ட் வாங்கிய பிறகு என்ன நடந்தது என அன்புமணி தெரிவித்தார்..

குருவுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால் அவரைச் சுற்றியிருந்தவர்கள் அதனை தடுத்துவிட்டதாகவும் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு சிகிச்சைப் பலனளிக்காமல் கடந்த மே மாதம் 26ஆம் தேதி காலமானார்.   இந்த நிலையில் குருவின் மகள் விருதாம்பிகை, தனது அத்தை மகன் மனோஜை கடந்த  மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்பு   பாமக மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார்.

இந்த நிலையில், குருவுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா  குருவின் சொந்த ஊரான காடுவெட்டியில் நேற்று பிரமாண்டமாக  நடைபெற்றது.  மணிமண்டபம் கட்டுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அடிக்கல் நாட்டினார். இதில் குருவின் குடும்பத்திலிருந்து அவரது மனைவி சொர்ணலதா மட்டுமே கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி,. குருவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து   யாருக்கும் தெரியாத பல விஷயங்களை பேசினார், “குருவை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென நாங்கள் கடுமையாக முயற்சி செய்தோம். இதில் நாங்கள் இவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்று சொன்னால் அது அசிங்கம். எத்தனை கோடி செலவு செய்தாலும், குருவை காப்பாற்றிவிட வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை. எங்களுக்கு பணம் ஒரு பொருட்டு கிடையாது. குருவை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தோம், அவரிடம் பாஸ்போர்ட் இல்லை. நானும் பாஸ்போர்ட் வாங்கச் சொல்லி பல முறை சொன்னேன். பல முயற்சிகளுக்குப் பிறகு ஒருவழியாக பாஸ்போர்ட் வாங்கினோம். அப்போது வெளிநாட்டு அழைத்தேன், ஆனால் அவர் பொங்கல் முடியட்டும் தீபாவளி முடியட்டும் என்று கூறி காலத்தை கடத்திவிட்டார். இது எல்லோருக்குமே தெரியும். 

குருவுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முயன்றதாகவும் கூறிய அன்புமணி, “interstitial lung diseases என்னும் நோயை குணப்படுத்த முடியாது. அதற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே வழி. இதற்காகவும் பல முயற்சிகளை மேற்கொண்டோம், ஆனாலும் தனக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். 

ஏனென்றால் அதுபற்றி அவருக்கு தெரியவில்லை. அறுவை சிகிச்சை செய்தால் இப்படி ஆகிவிடும், அப்படி ஆகிவிடும் என்று குருவுடன் இருந்தவர்கள் அவரை குழப்பியுள்ளனர். அப்படி குழப்பியவர்கள் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யவில்லையெனில் உயிருடன் இருக்க முடியாது என்று குருவிடம் சொல்லவில்லை. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, சென்னைக்கு அருகிலேயே அப்பார்ட்மெண்ட் எடுத்து தங்கவைக்கிறேன். அவர் வெளியில் வர வேண்டாம், உயிருடன் இருக்கிறார் என்ற சந்தோஷம் நமக்கு இருக்கும் என்று கூறினேன். ஆனால் உடனிருப்பவர்கள் அவரது மனதை மாற்றிவிட்டனர்” என்றும் வருத்தத்துடன் பேசினார். அன்புமணி பேச்சைக்கேட்ட பாமகவினர் கண்கலங்கினார்.

click me!