
எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிக்க வாய்ப்பே இல்லை எனவும் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் பெரும் பழியை சுமக்கிறார் எனவும் டிடிவி ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சபாநாயகர் தனபால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தார்.
இதுகுறித்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்க முடியாது எனவும் ஆனால் அடுத்த தீர்ப்பு வரும் வரை அடுத்த கட்ட நடவடிக்கை ஏதும் எடுக்க கூடாது எனவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிக்க வாய்ப்பே இல்லை எனவும் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் பெரும் பழியை சுமக்கிறார் எனவும் தெரிவித்தார்.
மேலும், அளவுக்கு மீறி ஊழல் அறங்கேறி வருகிறது என கூறியதற்கு தகுதி நீக்கமா எனவும் தமிழ்நாட்டை வாரி சுருட்ட வேண்டும் என எடப்பாடி தரப்பு நினைக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
நீதிமன்ற தீர்ப்பு மூலம் நீதியும் நியாமமும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது எனவும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் தான் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.