ஈரோடு இடைத்தேர்தலை பொறுத்தவரை வெற்றி எங்களுக்கு தான். அனைத்து தொகுதி மக்களும் திமுக அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். திமுக அரசுக்கு எதிராக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் போராடுகின்றனர்.
யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் ஆதரவு கேட்கலாம். எங்களைப் பொறுத்தவரை, எங்கள் கூட்டணி கட்சிகள் எங்களுக்கு தான் ஆதரவு அளிப்பார்கள் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். திமுக மாதிரி சர்வாதிகார கட்சி கிடையாது. இது ஜமீன்தார் கட்சியோ, அரச கட்சியோ கிடையாது. வேட்பாளரை அறிவிக்க 31ம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. ஈரோடு இடைத்தேர்தலை பொறுத்தவரை வெற்றி எங்களுக்கு தான். அனைத்து தொகுதி மக்களும் திமுக அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். திமுக அரசுக்கு எதிராக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் போராடுகின்றனர்.
இதையும் படிங்க;- ஈரோடு தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாரான இபிஎஸ்.. திமுக 33, அதிமுக 106 .!
undefined
இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் தோல்வி அடைவது உறுதி. பொதுக்குழு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். அதிமுக வேட்பாளர் விண்ணப்பம் படிவத்தில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவார். தேசிய கட்சிகள் மாநில அளவில் முடிவு செய்ய முடியாது. தேசிய அளவில் கேட்டுத்தான் முடிவு செய்வார்கள். மாநில கட்சிகள் உடனே கூறிவிடுவார்கள் என்றார்.
இதையும் படிங்க;-அழிவின் விளிம்பில் அதிமுக.. வயிற்றெரிச்சலை அடக்க முடியாமல் உளறும் ஜெயக்குமார்.. மாஸ் பதிலடி கொடுத்த மநீம..!
மேலும், அதிமுக பெரிய கட்சி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே கூறியுள்ளார். எங்கள் கூட்டணி கட்சிகளின் ஆதரவு எங்களுக்குத் தான். யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் ஆதரவு கேட்கலாம். எங்களைப் பொறுத்தவரை, எங்கள் கூட்டணி கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.