இது தெரியாதா.? மதநம்பிக்கை முக்கியமென்றால் வாக்களிக்காதீர்கள்.. முகவர் கைதுக்கு கொந்தளிக்கும் பாஜக.!

Published : Feb 19, 2022, 09:07 PM IST
இது தெரியாதா.? மதநம்பிக்கை முக்கியமென்றால் வாக்களிக்காதீர்கள்.. முகவர் கைதுக்கு கொந்தளிக்கும் பாஜக.!

சுருக்கம்

ஹிஜாப் அணிந்து வாக்களிக்க சென்றால் வாக்காளரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படும்" என்றும், "கடவுச்சீட்டு  வேண்டுமென்றால் ஹிஜாபை நீக்கி புகைப்படம் எடுத்து கொள்ளும் இஸ்லாமிய பெண்கள் வாக்காளர் அடையாள புகைப்படம் எடுக்க மறுப்பது தவறு" என்றும் ஜனவரி 23, 2010 ம் ஆண்டு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வாக்களிப்போரின் அடையாளம் தெரிந்து கொள்ளப்பட வேண்டியது மற்ற வாக்காளர்களின் உரிமை மட்டுமல்ல, வேட்பாளர்களின் கடமையும் கூட என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணிடம் பாஜக முகவர் கிரிராஜன், ஹிஜாப்பை அகற்றும்படி வாக்குவாதம் செய்தார். இதனையத்து பாஜக முகவர் வாக்குச்சாவடியிலிருந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள். இந்நிலையில் கிரிராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கனிமொழி உள்ளிட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கிரிராஜன மதுரை போலீஸார் இன்று கைது செய்தனர். அவருடைய கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “'நமது நாடு மதச்சார்பற்ற நாடு; ஹிஜாப் அவரது உரிமை' என்று மதுரை சம்பவம் குறித்து தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மதத்திற்கு ஆதரவாக தேர்தல் ஆணையர் பேசக் கூடாது. வாக்களிப்போரின் அடையாளம் தெரிந்து கொள்ளப்பட வேண்டியது மற்ற வாக்காளர்களின் உரிமை மட்டுமல்ல, வேட்பாளர்களின் கடமையும் கூட.. சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ள பாஜகவின் வாக்குச்சாவடி முகவர் கிரிராஜனை உடன் விடுதலை செய்யப்பட  வேண்டும். உச்ச நீதி மன்றத்தின் உத்தரவை தேர்தல் ஆணையர் மீறக்கூடாது.” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் வெளியிட்ட இன்னொரு பதிவில், “இன்று மதுரை மேலூர் 8வது வார்டு அல்அமீன் பள்ளி  வாக்குச்சாவடியில் ஹிஜாப் அணிந்து சென்ற இஸ்லாமிய பெண்மணியின் அடையாளம் வேண்டி ஆட்சேபணை தெரிவித்த பாஜகவின் வாக்குச்சாவடி முகவர் கிரிராஜனை வெளியேற்றியது  வன்மையாக கண்டிக்கத்தக்கது. அது அவரின் சட்ட உரிமை மட்டுமல்ல கடமையும் கூட. 

"உங்களுக்கு மத நம்பிக்கைகள்தான் முக்கியம் என்று கருதுவீர்களேயானால் வாக்களிக்க செல்லாதீர்கள். ஹிஜாப் அணிந்து வாக்களிக்க சென்றால் வாக்காளரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படும்" என்றும், "கடவுச்சீட்டு  வேண்டுமென்றால் ஹிஜாபை நீக்கி புகைப்படம் எடுத்து கொள்ளும் இஸ்லாமிய பெண்கள் வாக்காளர் அடையாள புகைப்படம் எடுக்க மறுப்பது தவறு" என்றும் ஜனவரி 23, 2010 ம் ஆண்டு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது தெரியாமல் சட்ட விரோதமாக பாஜக வின் முகவரை வெளியேற்றிய அதிகாரிகளை தேர்தல் ஆணையம்  தண்டிக்க வேண்டும். மீண்டும் பாஜக முகவரை வாக்குசாவடிக்குள் அனுமதிக்க வேண்டும். நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும்.” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!