மோடிக்கு இன்னொரு தடவை ஓட்டு போட்டுராதீங்க !! கொந்தளித்த யஷ்வந்த் சின்ஹா….

Published : Nov 01, 2018, 08:58 PM IST
மோடிக்கு இன்னொரு தடவை ஓட்டு போட்டுராதீங்க !! கொந்தளித்த யஷ்வந்த் சின்ஹா….

சுருக்கம்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மன்னிக்க கூடாது என்றும் அவரை மீண்டும் பிரதமராக விடக் கூடாது என்றும்  முன்னாள் மத்திய அமைச்சர்  யஷ்வந்த் சின்ஹா காட்டமாக தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் வந்தலி என்ற இடத்தில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு  பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா , இந்த அரசாங்கம் அனைத்து முனைகளிலும் தோல்வியடைந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

மோடி ஆட்சியில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ,  தலித்துகள் என  எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெட்டி ஸ்லோகன்களை மட்டுமே பாஜகவினர் கூறி வருகின்றனர். எதிர்வரும்  தேர்தல் தான் இந்த அரசாங்கத்தை தூக்கி எறிய ஒரே வழி என்றும் அவர் தெரிவித்தார். .

2014-ல் நடந்த பொதுத்  தேர்தல்களுக்கு முன்னரே வாக்குறுதிகளை அளித்தபோது பி.ஜே.பி.யில் ஒரு அங்கமாக  இருந்ததால் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் என்றும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Archana Kalpathi: திரிஷாவின் நெருங்கிய தோழிக்கு அரசுப் பதவி.! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக அரசு.!
CM Vijay: டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்கிய சங்கீதா! சமரசமா? அரசியல் நிர்பந்தமா?