கூட்டணியை உறுதி செய்த ராகுல்... தெறிக்க விடப்போகும் நாடாளுமன்ற தேர்தல்!

By vinoth kumarFirst Published Nov 1, 2018, 5:46 PM IST
Highlights

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சி இணைந்து போட்டியிடுவோம் என ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சி இணைந்து போட்டியிடுவோம் என ராகுல்காந்தி அறிவித்துள்ளார். முன்னதாக ஆந்திர முதல்வரும் தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

 

தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் டிசம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே தேசிய அளவில் பா.ஜ.க. அல்லாத மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா தேர்தலுக்கு முன் மெகா கூட்டணியை உருவாக்கி, பா.ஜ.க. வை வீழ்த்த திட்டமிட்டுள்ளார். முதல்கட்ட பேச்சுவார்த்ைதயை டெல்லியில் இன்று துவங்கினார். 

பின்னர் ராகுல் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டாக பேட்டியளித்தனர். இதில் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சி இணைந்து போட்டியிடுவோம் என ராகுல்காந்தி தெரிவித்தார். மேலும் நாட்டை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஒரணியில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நாடு சோதனையான காலகட்டத்தில் உள்ளதாக ராகுல் கூறியுள்ளார். ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்தது சந்தேகமே இல்லை என்று உறுதிப்பட கூறியுள்ளார். எங்கள் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஊழல் செய்தது யார்? ஊழல் பணம் எங்கே சென்றது என்று விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

சந்திரபாபு நாயுடு உறுதி

தேசத்தை காக்கவும் ஜனநாயகத்தை காக்கவும் சந்திரபாபு நாயுடு உறுதிப்பட தெரிவித்துள்ளார். அனைத்துக்கட்சிகளும் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது என்றார். ரிசர்வ் வங்கி, சிபிஐ உள்ளிட்டவற்றை அழிக்கும் வேலையில் மோடி ஈடுபட்டுள்ளார் என சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜகவை வீழ்த்துவதே எங்களின் முதல் நோக்கம்; அதற்கான சந்திப்புதான் நடைபெற்றது. எங்களுடன் இணையுமாறு திமுக தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்த உள்ளேன் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதை ராகுல் காந்தி ஆதரிக்கிறார் என்றார். 

click me!