"கமலுக்கு எதிராக பேசக்கூடாது" - தமிழிசை, எச்.ராஜாவுக்கு அமித்ஷா எச்சரிக்கை!

First Published Jul 24, 2017, 3:07 PM IST
Highlights
dont oppose kamal says amitsha


கமலஹாசனுக்கு எதிராக இனி பேசக்கூடாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் அக்கட்சியின் தேசிய செயலாளர்  எச்.ராஜா ஆகியோருக்கு  அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்

தமிழக அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதால் தமிழக அமைச்சர்கள் கமலுக்கு எதிராக பேசி வருகின்றனர். அதே போல் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் எச்,ராஜா ஆகியோரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அ.தி.மு.க., அம்மா அணியில் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவை, பாஜகவுடன்  இணக்கமான போக்கை கடைபிடித்து வருவதால், தமிழக அரசை எல்லா நிலைகளிலும் எதிர்த்து செயல்பட வேண்டாம் என்று, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா உத்தரவிட்டிருக்கிறார்.

இதையடுத்த தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் பலரும், தமிழக அரசுக்கு எதிராக பேசுவதை நிறுத்திக் கொண்டனர்.
ஆனால் தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று, நடிகர் கமல், விமர்சனம் செய்ததையடுத்த தமிழக அமைச்சர்களுக்கு நிகராக தமிழிசையும், ராஜாவும் கமலஹாசனை தூற்றி வருகின்றனர்.

இதை டெல்லி பாஜக  தலைவர்கள் விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசை விமர்சிப்பதில் மென்மை காட்டத்தான் சொல்லப்பட்டதே தவிர, தமிழக அரசு நடவடிக்கைகளுக்கு வெண்சாமரம் வீசச் சொல்லவில்லை என அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை கமலஹாசன் முன்வைத்தால் அதற்கு தமிழக அரசே பதில் சொல்லட்டும் என்றும் பாஜக தலைவர்கள் இனி யாரும் கமலஹாசனை விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!