6 காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட் - சபாநாயகர் அதிரடி...

 
Published : Jul 24, 2017, 02:41 PM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
6 காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட் - சபாநாயகர் அதிரடி...

சுருக்கம்

Speaker Sumitra Mahajan has ordered the suspension of six members of the Lok Sabha members of the Congress for five days.

அமளியில் ஈடுபட்ட காங்கிரஸை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 6 பேரை 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து அதிரடியாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, ஸ்வீடனிடம் இருந்து போஃபர்ஸ் பீரங்கிகளை இந்திய ராணுவத்திற்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதையடுத்து இதில் சிலருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் 1989 ல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

இதைதொடர்ந்து, இதுகுறித்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், 2005 ஆம் ஆண்டு வழக்கு விசாரணையை ரத்து செய்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் பொதுவிவாதம் நடைபெற்றது.

விவாதம் தொடங்கியதும், போஃபர்ஸ் பீரங்கி ஊழலை சிபிஐ மீண்டும் விசாரிக்க கோரி பாஜக உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேட்டனர். இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், எம்பிக்கள் கோகாய், சுரேஷ், ஆதிரஞ்சன் சவுத்ரி, ரஞ்சித் ரஞ்சன், சுஷ்மிதா தேவ், எம்.கே ராகவன் ஆகிய 6 பேரையும், 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

காகிதங்களை வீசி எறிந்ததாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!