ஆட்சியே போனாலும் பரவாயில்ல !! குடியுரிமைச் சட்டத்தை அமல் படுத்த மாட்டோம் !! சவால் விட்ட முதலமைச்சர் !!

By Selvanayagam PFirst Published Dec 18, 2019, 8:52 AM IST
Highlights

புதுவை மாநிலத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், அதை நிறைவேற்றுவதற்கும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று  கூறிய முதலமைச்சர்  நாராயணசாமி , அதற்காக ஆட்சியே போனாலும் கவலைப்பட மாட்டோம் என தெரிவித்தார்.

மத்திய குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை வடக்கு மாநில தி.மு.க. சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 
இதில் பங்கேற்றுப் பேசிய அம்மாநில முதலமைச்சர்  நாராயணசாமி  மத்திய அரசு குடியுரிமை சட்டதிருத்த மசோதா அமல்படுத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தியபோது அவர்கள் மீது காவல் துறையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இது மக்களுடைய வாழ்வாதாரத்தை பறிக்கின்ற ஒரு சட்டமாகும், இந்த சட்டத்தை கொண்டு வருவதன் மூலமாக மக்களைப் பிரித்து இந்த நாட்டில் இந்து ராஜ்யம் என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்ற பாஜக  முயற்சிக்கிறது.

அது பலிக்காது. மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி இந்த சட்டத்தை என்னுடைய மாநிலத்தில் அமல்படுத்த விட மாட்டோம் என்றும், உயிரே போனாலும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறி இருக்கிறார்.

அதைப்போன்று புதுவை மாநிலத்திலும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், அதை நிறைவேற்றுவதற்கும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம், ஆட்சியே போனாலும் எங்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை என அதிரடியாக தெரிவித்தார்..

click me!