மக்களை சிரமப்படுத்தாதீர்கள், அவர்களுக்கு எடுத்துச் சொல்லுக்கள்.. அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ்.

Published : May 18, 2021, 11:35 AM ISTUpdated : May 18, 2021, 11:45 AM IST
மக்களை சிரமப்படுத்தாதீர்கள், அவர்களுக்கு எடுத்துச் சொல்லுக்கள்.. அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ்.

சுருக்கம்

முழு ஊரடங்கு நேரத்தில் மக்கள் அதிகமாக வெளியே வருவதை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 3வது அலையை கூட எதிர்கொள்ள அரசு தயாராகி வருவதாகவும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.  

முழு ஊரடங்கு நேரத்தில் மக்கள் அதிகமாக வெளியே வருவதை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 3வது அலையை கூட எதிர்கொள்ள அரசு தயாராகி வருவதாகவும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, கூறியதாவது: 

முழு ஊரடங்கு நேரத்தில் மக்கள் அதிகமாக வெளியே வருவதை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வியாபாரிகள், மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு தான் 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மக்களிடம் பிரச்சாரம் மூலமாக எடுத்து சொல்லுங்கள், அவர்களை சிரமப் படுத்தாதீர்கள் என தெரிவித்து உள்ளார் முதல்வர். 3 வது அலை வந்தால் கூட எதிர்கொள்வதற்கு அரசு தயாராகி வருகிறது. Remdesivir மருந்து விநியோக விவகாரத்தில் மக்களை சிரமப்படுத்த கூடாது என்ற நோக்கில் அரசு தனியாருக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்..
 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை