ஹிஜாப் போட்டு உள்ளே வரக்கூடாது.. வெளியே போங்க.. தனியார் பள்ளி ஆணவப் பேச்சு.. தாம்பரத்தில் பரபரப்பு.

Published : Apr 22, 2022, 01:17 PM IST
ஹிஜாப் போட்டு உள்ளே வரக்கூடாது..  வெளியே போங்க.. தனியார் பள்ளி ஆணவப் பேச்சு.. தாம்பரத்தில் பரபரப்பு.

சுருக்கம்

இச்சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தற்போது இதேபோன்ற ஒரு சம்பவம் சென்னை தாம்பரத்தில் நடந்துள்ளது. சென்னை தாம்பரம் சங்கரா வித்யாலயா பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்தப் பெண்ணை வெளியில் போகும்படி பள்ளி நிர்வாகம் கூறியுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை வெளியே போகும்படி கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பள்ளியை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த சம்பவத்தை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான திட்டங்களை பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு எதிர்க்கின்றன. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் குறிப்பாக தமிழகத்தில்  எதிர்க் கப்பட்டு வருகிறது. அதேபோல் இஸ்லாமிய கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் பாஜக ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  இஸ்லாமிய மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது.

இந்துத்துவா மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வருவதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்களும் காவி துண்டு அணிந்து வருவோம் என அவர்கள் எச்சரித்தனர். இந்நிலையில் மாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு எதிராக இந்துத்துவ மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர், அப்போது அவர்களை எதிர்த்து நின்ற அந்த மாணவி, அல்லாஹு அக்பர் என முழங்கினார். இதற்க்கான வீடியோ சமூகவலைதளத்தில் வைரல் ஆனது.  இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இஸ்லாமியர்கள் குறிவைத்து இதுபோன்ற போராட்டங்கள் தூண்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தற்போது இதேபோன்ற ஒரு சம்பவம் சென்னை தாம்பரத்தில் நடந்துள்ளது. சென்னை தாம்பரம் சங்கரா வித்யாலயா பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்தப் பெண்ணை வெளியில் போகும்படி பள்ளி நிர்வாகம் கூறியுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 தாம்பரத்தை சேர்ந்த ஆஷிக் மீரான் என்பவர் கிழக்கு தாம்பரத்தில் இயங்கிவரும் சங்கர வித்யாலயா பள்ளியில் தனது 4 வயது குழந்தை எல்கேஜி வகுப்பு சேர்க்கைக்காக தனது மனைவியுடன் சென்றிருந்தார். பள்ளி வளாகத்தில் விண்ணப்பம் பெறுவதற்காக அவர்கள் காத்திருந்தனர். அப்போது பள்ளியின் அட்மின் மேலாளர் சுந்தர்ராமன் என்பவர் குழந்தையின் தந்தை அழைத்து தங்கள் மனைவியை வெளியே சென்று ஹிஜாபை கழட்டி வைத்து விட்டு வருமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தபோது பள்ளியின் உள்ளே யாரும் ஹிஜாப் அணிந்து வர அனுமதி இல்லை என்று முதல்வரும் கூறியதாகவும், எனவே சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிக் மீரான் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர், தமுமுகவினர் பல்வேறு அமைப்பினரும் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். கர்நாடக மாநிலத்தில் நடந்த சம்பவம் தற்போது தமிழகத்திற்கும் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!