EMI கட்டுவதற்கு 6 மாதகாலம் அவகாசம் வழங்க வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின், ரிசர்வ் வங்கி ,மத்திய அரசுக்கு கடிதம்.

By Ezhilarasan BabuFirst Published May 13, 2021, 9:29 AM IST
Highlights

மாதந்தோறும் வசூலிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி தொகையை, ஆறுமாதங்களுக்கு பிடித்தம் செய்திடக் கூடாது என்றும் வலியுறுத்தி மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் கடிதம் அனுப்பி உள்ளார். 
.

தமிழகத்தில் கொரோனாவினால் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள  முழு ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-5-2021 அன்று முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  

அக்கூட்டத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்கள், ஆட்டோரிக்க்ஷா, கால் டாக்ஸி வாகனம் வைத்திருப்போர் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை (இஎம்ஐ) கட்டுவதற்கு காலநீட்டிப்பு வழங்குவது குறித்து ஒன்றிய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். அதன் அடிப்படையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவர்களுடைய சுமையை குறைக்கும் வகையில் 6 மாத காலத்திற்கு அவகாசம் வழங்க வேண்டும் என்றும்,

இந்த காலத்திற்கு வட்டி ஏதும் வசூலிக்கக் கூடாது என்றும், தொழிலாளர்களிடம் இருந்து மாதந்தோறும் வசூலிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி தொகையை, ஆறுமாதங்களுக்கு பிடித்தம் செய்திடக் கூடாது என்றும் வலியுறுத்தி மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் கடிதம் அனுப்பி உள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

click me!