வெளியே சொல்லி அசிங்கப்படாதே... வெளியே எடுத்துவிடு... மனைவிக்கு பப்ஜி மதன் அட்வைஸ்..!

By Thiraviaraj RMFirst Published Aug 6, 2021, 5:43 PM IST
Highlights

இனி நம்மிடம் சொகுசு கார் இல்லை என வெளியில் யாரிடமும் கூறாதே. 

யூடியூபில் ஆபாசமான பேச்சுக்களை பேசி, வீடியோக்களை பதிவிட்டு வந்த பப்ஜி மதனை கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தார்கள். தொடர்ந்து மதனின் மனைவியும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பப்ஜி மதன் மீது ஜூலை மாதம் 6ம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அறிவுரைக்கழகத்தில் மதன் ஆஜரானார். 

சென்னை மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் உள்ள இந்த அறிவுரைக்கழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்பு மதன் ஆஜராகி, அவர்மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்வதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதனை பயன்படுத்தி குண்டர் சட்டம் செல்லாது, தன்மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளது என அவர் தரப்பு வாதிடலாம். இதன் தொடர்ச்சியாக விசாரணை அதிகாரி ஆஜராகி பப்ஜி மதன் மீது எதற்காக குண்டர் சட்டம் போடப்பட்டது என்பது தொடர்பான ஆதாரங்களை முன்வைப்பார். அதன் பின்னரே இந்த வழக்கில் மதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது சரியா? அல்லது ரத்து செய்யவேண்டுமா? என்பது தொடர்பான முடிவை ஓய்வு பெற்ற நீதிபதிகள் மேற்கொள்வார்கள். 

அப்போது வாதாடிய மதனின் மனைவி கிருத்திகா, ‘’பப்ஜி மதன் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டை விளையாடவில்லை. சீன செயலிதான் தடை செய்யப்பட்டுள்ளது. கொரியா வெர்ஷனை தான் விளையாடி பதிவேற்றினோம். தடை செய்யபட்ட ஆன்லைன் விளையாட்டை விளையாடவில்லை. சீனா செயலிதான் தடை செய்யப்பட்டுள்ளது. கொரியா வெர்ஷன் ஆன்லைன் விளையாட்டை தான் விளையாடி பதிவேற்றினோம். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டிய அளவிற்கு தவறு செய்யவில்லை. சாதாரண சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்கலாம்" என மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா அறிவுரை கழகத்தில் வாதிட்டதாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்த பின்னர் பப்ஜி மதனை சிறையிலடைக்க போலீசார் அவரை அழைத்து சென்றனர். குறிப்பாக போலீசார் பப்ஜி மதனை வேனில் அழைத்து வந்தபோது அறிமுக வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வேன் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பப்ஜி மதனும் அவரது மனைவி கிருத்திகாவும் சில மீட்டர் தூரம் தள்ளி இருந்த நிலையில் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.

பப்ஜி மதன் தனது மனைவிக்கு "நாம் வைத்திருக்கும் இரண்டு கார்களுமே சொகுசு கார்கள் தான். இனி நம்மிடம் சொகுசு கார் இல்லை என வெளியில் யாரிடமும் கூறாதே. காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள இரண்டு கார்களையும் வழக்கறிஞர்களை வைத்து வெளியே எடுத்து விடு " என அறிவுரை கூறினார்.
 

click me!