வயசானாலும் உங்க ஸ்டைலும், அழகும் குறையவே இல்லை ஸ்டாலின் சார்.. முதல்வரிடம் பேசிய கிருஷ்ணகிரி பெண்.

By Ezhilarasan BabuFirst Published Aug 6, 2021, 5:22 PM IST
Highlights

கடைசியாக போனை வைக்கும்போது சார் சூப்பரா இருக்கீங்க சார் எவ்வளவு வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் கொஞ்சம் கூட குறையல சார்.ஹாட்ஸ்ஆப் யூ சார் என கூறி நெகிழ்ந்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின்  தனக்கு கால் செய்து பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக கிருஷ்ணகிரியை சேர்ந்த பெண் ரம்யா கூறியிருந்த நிலையில், முதல்வரும் அதேபோல் அந்த பெண்ணுக்கு தொலைபேசியில் அழைத்து உரையாடினார். இதில் நெகிழ்ந்து போன அந்த பெண்.. முதல்வரிடம் மனம் திறந்து அவரது ஆட்சியையும், செயல்பாடுகளை பாராட்டியுள்ளார். அதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

முதல்வருடன் அந்தப் பெண்ணும் அவரது மகள் (பள்ளி மாணவியும்) உரையாடிய விவரம் பின்வருமாறு: மக்களுக்கு நீங்க நிறைய பண்ணனும் சார்.. ரோடு நல்லா போட்டு, தண்ணியை இணைத்துவிட்டால் தமிழ்நாடு எங்கேயோ போய்விடும் சார். நீங்கள் மக்கள்  முதல்வர் ஆயிட்டீங்க சார்.. நான் உங்க கூட இவ்ளோ க்ளோசா பேச முடியும்னு நான் நெனைக்கவே இல்லை சார். இது அருமையான ஆட்சி சார், இந்த ஆட்சி இன்னும் நிறைய வருஷத்துக்கு தொடர வேண்டும் சார்..  ஐயா தான் 11 வருஷம் முதலமைச்சராக இருந்திருக்கிறார். அடுத்து நீங்கதான் அந்த ரெக்கார்ட் பிரேக் செய்யணும் சார் என அந்தப் பெண் கூற, அனைத்திற்கும் சரி சரி என்று சொன்ன முதலமைச்சர் ஓகே என கூற விடை பெற முயன்றார்.

அப்போது அந்த பெண், நீங்க கால் செய்து பேசியதுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார்..எங்க அப்பா கிட்டயும் கொஞ்சம் பேச முடியுமா சார் என அந்தப் கேட்டார் அவர், கட்டாயமாக என முதல்வர் பதிலளிக்க, காண்பிரன்ஸ் கால்பொடுகிறேன் சார் என்றார். ஆனால் முதல்வர் பிறகு ஒரு முறை பேசுகிறேன் என்றார்.  இந்த நம்பருக்கு நான் உங்களை அழைத்தால் பேச முடியுமா சார் என அந்தப் பெண் கேட்க, அவர் பேச முடியும் என பதில் அளித்தார். கடைசியாக போனை வைக்கும்போது சார் சூப்பரா இருக்கீங்க சார் எவ்வளவு வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் கொஞ்சம் கூட குறையல சார்.ஹாட்ஸ்ஆப் யூ சார் என கூறி நெகிழ்ந்தார். உடனே அந்த பெண்ணுக்கு  நன்றி விடைபெற முயன்றார் முதல்வர். ஆனால் அவரை தொடர்ந்து அவரது மகள் ரிஷ்மயா முதல்வரிடம் உரையாடினார். அதில், 

நல்லா இருக்கீங்களா சார்.. 12 ஆம் வகுப்பு படிக்கிறேன் சார். ஸ்கூல்ல சீக்கிரம் ஓபன் பண்ணுங்க சார், ரெண்டு வருஷமா வீட்டில இருக்க முடியல சார், என அந்த மாணவி கூற, கொரோனா இருப்பதனால்தான் பள்ளி திறக்க முடியவில்லை, ஆன்லைனில் படிக்கிறீர்கள்தானே.? என முதல்வர் கேட்க, ஆமாம் சார் ஆன்லைனில் படிக்க முடியவில்லை, விரைவாக பள்ளியை திறக்கனும் சார் என கூற,  கொரோனா முடியும் என முதலமைச்சர் பதில் தெரிவித்தார். அதற்கு அந்த மாணவியும், சார் ரொம்ப சூப்பரா இருக்கீங்க சார், அழகாய் இருக்கீங்க சார், என கூற முதல்வரும் தேங்க்ஸ் மா எனகூறி அவர்களிடம் இருந்து விடைபெற்றார். 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று கிருஷ்ணகிரி சென்றிருந்த முதலமைச்சர் கான்வாயை இடைமறித்த பெண் ஒருவர் அவரின் முகக் கவசத்தை கழற்றச் சொல்லி, அவரைப் பார்த்து பூரித்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் விழா முடிந்து உழவர்சந்தை சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்ற அவரது காரை பார்த்த தொண்டர்களும், பொதுமக்களும் சிலர் அவரைப் பார்த்து கையசைத்தார். 

பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ சென்றுகொண்டிருந்த அவரின் வாகனம் பெண்கள் சிலர் தனியாக  நின்று பார்ப்பதை கண்டு நின்றது. அப்போது சாலையில் காத்திருந்த ரம்யா 42 என்ற பெண், முககவசம் அணிந்திருந்த முதல்வரிடம், " சார் உங்கள எப்ப சார் பார்க்கிறது"  "தயவு செய்து ஒருமுறை மாஸ்க்கை கழட்டுங்க சார்"  என்றவுடன் அவரும் புன்முறுவலுடன் மாஸ்க்கை கழட்டி புன்னகை உதிர்த்தார். அவரின் முகத்தைப் பார்த்து பூரித்துப்போன அந்தப் பெண், அயராத உழைப்பு... விடாமுயற்சி. விஸ்வரூப வெற்றியின் மறுபெயர்தான் ஸ்டாலின் என முழங்கினார். அதைக்கேட்ட முதல்வரும் சிரித்தவாறே அவர்கள் கொடுத்து விண்ணப்பை பெற்று, நன்றி கூற அங்கிருந்து விடை பெற்றார். 

இந்நிலையில் இன்று காலை அந்த பெண்ணிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர் அப்போது, முதல்வரை மிக அருகில் நின்று பார்த்து பேசியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எங்கள் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறது, அதேநேரத்தில் முதவரிடம் நான் கொடுத்த விண்ணப்பத்தில் என் பெயர் மொபைல் எண் குறிப்பிட்டிருக்கிறேன். நிச்சயம் அவர் எனக்கு போன் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. என அந்தப் பெண் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் முதலமைச்சர் அந்த பெண்ணிக்கு தொலைபேசியில் அழைத்து பேசினார் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!