தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டத்துக்கெல்லாம் பயப்படக்கூடாது….மோடிக்கு  கடிதம் எழுதிய முதலமைச்சர்…

 
Published : Apr 06, 2018, 09:31 AM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டத்துக்கெல்லாம் பயப்படக்கூடாது….மோடிக்கு  கடிதம் எழுதிய முதலமைச்சர்…

சுருக்கம்

Dont afraid about the tamil nadu protests told siddaramiah

காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் அழுத்தத்திற்கு அடி பணிய வேண்டாம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலதாமதம் இன்றி அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று  மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட போராட்டம், ரெயில் மற்றும் சாலை மறியலில் சுமார் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அழுத்தத்திற்கு பணிய வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் காவிரி பிரச்சனையில் ஒரு திட்டத்தை ஏற்படுத்த உச்சநீதிமன்றம்  கூறியுள்ளது. நதிநீர் பங்கீட்டுக்கு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.



தனது கடிதத்தில் நதிநீர் பங்கீட்டு அமைப்பு என சுட்டிக்காட்டியுள்ள சித்தராமையா, காவிரி மேலாண்மை வாரியம் என குறிப்பிடவில்லை என சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

தொடக்கம் முதலே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு  கர்நாடக  காங்கிரஸ் அரசு, பா.ஜ.க உள்ளிட்ட அம்மாநில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

PREV
click me!

Recommended Stories

தவெகவில் இணையப்போகிறேனா..? ஷாக் அப்டேட் கொடுத்த வைத்திலிங்கம்- அதிமுக டாக்டர் சரவணன்..!
ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது..! தம்பிதுரை மீண்டும் திட்டவட்டம்..!