ரஜினியை பற்றி தெரியாதா..? தப்புத் தப்பா போட்டு திருத்திக் கொண்ட பியர்ல்ஸ் கிரில்ஸ்..!

Published : Jan 29, 2020, 12:41 PM IST
ரஜினியை பற்றி தெரியாதா..? தப்புத் தப்பா போட்டு திருத்திக் கொண்ட பியர்ல்ஸ் கிரில்ஸ்..!

சுருக்கம்

 தனது முதல் ட்வீட்டை டெலிட் செய்த பியர் கிரில்ஸ், மற்றொரு ட்வீட் செய்து அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி என குறிப்பிட்டுள்ளார்.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர் கிரில்ஸ், காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார்.

மோடியை அடுத்து பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி கலந்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது குறித்து பியர் கிரில்ஸ் முதலில் ஒரு ட்வீட் செய்தார். அதில், பிரதமர் மோடி உடனான நிகழ்ச்சி, தொலைக்காட்சி வரலாற்றில் சாதனை படைத்தது. அதன் பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினி என்னுடைய புதிய நிகழ்ச்சியில் இணைந்துள்ளார் என  குறிப்பிட்டிருந்தார். ரஜினியுடன்தான் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்தார்.

பியர் கிரில்ஸின் ட்வீட்டுக்கு பதில் அளித் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும் ரஜினிகாந்த் பாலிவுட் சூப்பர் ஸ்டார் இல்லை என்றும் அவர் கோலிவுட் சூப்பர் ஸ்டார் என்றும் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து தனது முதல் ட்வீட்டை டெலிட் செய்த பியர் கிரில்ஸ், மற்றொரு ட்வீட் செய்து அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி என குறிப்பிட்டுள்ளார்.
 

 

PREV
click me!

Recommended Stories

210 இடங்களில் அதிமுகவின் வெற்றி உறுதி.. பொதுக்குழுவில் அடித்துக் கூறும் இபிஎஸ்
தவெகவில் இணையப்போகிறேனா..? ஷாக் அப்டேட் கொடுத்த வைத்திலிங்கம்- அதிமுக டாக்டர் சரவணன்..!