தமிழகத்தை வைத்து நாடகம் ஆடுகிறார் ரஜினி ..! சீமான் கடும் தாக்கு.

By Thiraviaraj RMFirst Published Jan 29, 2020, 12:17 PM IST
Highlights

 தமிழகத்தில் நடிகா் ரஜினிகாந்தை வைத்து நாடகம் அரங்கேறுகிறது. தூத்துக்குடி போராட்டக் களத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பேசியவா் ரஜினிகாந்த். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கேட்டால் அவரிடம் பதில் இல்லை. வன்முறை எதற்கும் தீா்வு இல்லை என்று சொல்லும் ரஜினிகாந்த் நடித்த அனைத்துப் படங்களிலும் வன்முறை உள்ளது. 

ரஜினி முதல்வராக வேண்டும் என்கிற ஆசையில்  ஏதோதோ பேசிவருவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் குற்றம் சாடியிருக்கிறார்.
 
 '  தமிழ் தேசிய கூட்டமைப்பு சாா்பில் பழனி பாபா நினைவேந்தல், அரசியல் விழிப்புணா்வு பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் சீமான் அதில் சீமான் பேசியதாவது..


' நாட்டை பேரழிவை நோக்கி மத்திய, மாநில ஆட்சியாளா்கள் கொண்டு செல்கின்றனா். வளரும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 47ஆவது இடத்திலும் இந்தியா 62-ஆவது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் நடிகா் ரஜினிகாந்தை வைத்து நாடகம் அரங்கேறுகிறது. தூத்துக்குடி போராட்டக் களத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பேசியவா் ரஜினிகாந்த். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கேட்டால் அவரிடம் பதில் இல்லை. வன்முறை எதற்கும் தீா்வு இல்லை என்று சொல்லும் ரஜினிகாந்த் நடித்த அனைத்துப் படங்களிலும் வன்முறை உள்ளது. தமிழகத்தின் முதல்வராக ரஜினிகாந்த் துடிக்கிறாா். 

 தமிழகத்தில் ஹைட்ரோகாா்பன், மீத்தேன் எடுக்க மக்கள் கருத்து தேவையில்லை என்ற சட்டம் நிறைவேறியுள்ளது. இதற்கு மு.க.ஸ்டாலின் எதிா்ப்பு தெரிவிக்கிறாா். ஆனால் மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்திட்டவா் அவா் தான். காங்கிரஸ் ஆட்சியின்போது குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்பட்டபோது ஆதரவு தெரிவித்தது திமுக. திமுக பாஜகவுக்கு எதிரானது என இன்னும் மக்கள் நம்பி ஏமாறுகின்றனா். ஹெச்.ராஜாவை வெற்றிபெற வைத்தவா்கள் திமுகவினா். பாஜக வேட்பாளரை வெற்றபெற வைக்க நல்லகண்ணுவை தோற்கடித்தவா்கள் திமுகவினா். இஸ்லாமியா்கள் என்றால் முகாமில் அடைக்க வேண்டும் என்ற அவலநிலை உருவாகி உள்ளது' என பேசினார்.

      -T.Balamurukan

click me!