அந்த வெங்காயமே வேண்டாம்... ராமதாஸ் எச்சரிக்கை..!

Published : Dec 07, 2019, 11:32 AM IST
அந்த வெங்காயமே வேண்டாம்... ராமதாஸ் எச்சரிக்கை..!

சுருக்கம்

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஜனவரி மாத மத்தியில் தான் இந்தியா வரும் என்றால், அதனால் பயனில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’ஒவ்வொரு வீட்டிலும் இரு சக்கர ஊர்திகளுக்கு மாற்றாக மிதிவண்டிகள் இடம் பெறும் நாள் எந்நாளோ, அந்நாள் தான் நாட்டில் நீரிழிவு உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய்கள்  ஒழிந்து உடல் நலம் பெருகும் நாளாகும். மிதிவண்டி பயணத்தை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!

மிதிவண்டி பயணம் மனதுக்கும், உடலுக்கும், வீட்டின் பொருளாதாரத்திற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும், புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கும் நல்லது. எனவே, இரு சக்கர ஊர்திகளுக்கு மாற்றாக மிதிவண்டியை பயன்படுத்தத் தொடங்குங்கள். நலன் பெறுங்கள்! 

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஜனவரி மாத மத்தியில் தான் இந்தியா வரும் என்றால், அதனால் பயனில்லை. அதற்குள் உள்நாட்டு வெங்காய அறுவடை தொடங்கி விடும். எனவே, வெளிநாட்டு வெங்காய இறக்குமதியை விரைவுபடுத்த வேண்டும். சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும், அனைத்து சாலைகளிலும் மிதிவண்டிக்கு  தனி பாதை அமைக்கப்பட வேண்டும்’’என அவர் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!