இதை மட்டும் செய்தால் மீண்டும் ஊரடங்கு தேவைபடாது..!! அமைச்சர் எஸ்.பி வேலுமணி அதிரடி சரவெடி..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 16, 2020, 3:42 PM IST
Highlights

தற்போதைய சூழலில் முழு ஊரடங்கு தேவையில்லை என்றும், தேவைப்பட்டால் அதுகுறித்து மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து தெரிவிப்பார்கள் என்றும் கூறினார்

பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கினால் மீண்டும் முழு ஊரடங்கு தேவைப்படாது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் கோரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் கொரொனா தொற்று வேகம்  கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கோவையில் இதுவரை  80 ஆயிரத்து 623 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் ஆயிரத்து 591 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். மேலும், தனிமைபடுத்தப்பட்டவர்களை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்த அவர், கோவை மாநகருக்குள் அனுமதியில்லாமல் வாகனங்கள் மூலம் நுழைவதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கோவையில் கழிவு நீரை அகற்ற பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் அவர்களின் CSR நிதியில் இருந்து 2.12 கோடி ரூபாய் செலவில் 5 மண்டலங்களுக்கும் 5 ரோபோடிக் 2.O இயந்திரங்களை இன்று மாநகராட்சிக்கு வழங்கியுள்ளதாகவும், இது பயன்பாட்டிற்கு வரும் போது மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் சூழல் இல்லாத நிலை ஏற்படும் எனவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். கழிவுகளை அகற்றும் இந்த ரோபோடிக் 2.0 இயந்திரங்கள் தமிழகத்தில் மேலும் 34 நகரங்களுக்கு விரைவில் வழங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கோவையில் கட்டுக்குள் இருந்த நோய் தொற்று தற்போது அதிகமாக துவங்கி இருக்கின்றது என்றும், இரு சக்கர வாகனங்களில் அனுமதி இன்றி வருபவர்களால் இந்த நோய் தொற்று அதிகமாக ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். வெளியூரில் இருந்து யாராவது அனுமதி இன்றி வந்திருப்பது தெரியவந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், தொற்று ஏற்பட்டவர்களை அன்பாக பாதுகாத்தாலே நோய் முழுவதும் குணமாகிவிடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

மேலும், முகக்கவசம் அணியாதவர்களிடம் யாரும் பேச வேண்டாம் என்றும், அவர்களிடம் இருந்து விலகி இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.மாநகராட்சியின் ஒரு சில கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து தொற்று  வந்து கொண்டு இருப்பதாகவும், விதிகளை கடுமையாக்கி அதனை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு தாமதம் ஏற்பட கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், தற்போதைய சூழலில் முழு ஊரடங்கு தேவையில்லை என்றும், தேவைப்பட்டால் அதுகுறித்து மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து தெரிவிப்பார்கள் என்றும் கூறினார்.மீண்டும் முழு ஊரடங்கு கொண்டு வந்தால் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும், பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மீண்டும் முழு ஊரடங்கு தேவைப்படாது என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

 

click me!