கொரோனாவை ஒழிக்க அதிரடி... பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை... முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Jul 16, 2020, 3:22 PM IST
Highlights

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால், ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால், ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தி வருகிறது. இதனை, கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு கூட்டு மருந்து சிகிச்சையே அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சைக்கு நல்ல பலன் இருந்தாலும், இதைவிட பிளாஸ்மா சிகிச்சை சிறந்த பலன் தருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களின் ரத்த பிளாஸ்மாவை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா தெரபி. கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை குறைப்பதில் இது நல்ல பலனை தருவதாக மருத்துவரீதியாக நிரூபணமாகி வருகிறது. ஆகையால், தலைநகர் டெல்லியில் 2 பிளாஸ்மா வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அம்மாநிலத்தில் 5 நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 3 பேர் குணமடைந்துள்ளதாகவும் மருத்துவக்கல்வி அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று அதிகம் உள்ள டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில், பிளாஸ்மா தெரபி சிகிச்சையை மாநில அரசுகள் ஊக்குவித்து வரும் கர்நாடக அரசும் இவ்வாறு அறிவித்துள்ளது. 

click me!