"தெருவில் போகிற நாய்"... அதிமுக தொண்டரை மோசமாக விமர்சித்த திண்டுக்கல் சீனிவாசன்.

Published : Dec 13, 2021, 06:27 PM IST
"தெருவில் போகிற நாய்"...  அதிமுக தொண்டரை மோசமாக விமர்சித்த  திண்டுக்கல் சீனிவாசன்.

சுருக்கம்

 சிலர் அதிமுகவில் ஜனநாயகம் இல்லை, வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்களேயே தாக்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டுகின்றனர். தகுதியுடையவர்கள் தான் தேர்தலில் நிற்க வேண்டும். எங்கோ "தெருவில் செல்கிற நாய் " நானும் தேர்தலில் நிற்பேன் என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என அவர் பேசியுள்ளார். 

யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் என்ற ஜனநாயகம் அதிமுகவில் தான் உள்ளது. ஆனால் " தெருவில் போகிற நாய்" நானும் தேர்தலில் நிற்பேன் என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் எதிர் வரும் தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட்டால் அனைத்து இடங்களிலும் வெல்ல முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் சிறையில் இருந்து வெளிவந்துள்ள சசிகலா மீண்டும் கட்சியை கைப்பற்றும் பகிர்ந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஓபிஎஸ் மட்டும் ஓரளவுக்கு சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில், தற்போது அவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வருகிறார். இதனால் அதிமுகவில் தங்களுக்குள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதிவகளை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஓபிஎஸ் இபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்காக உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பையும் அவர்கள் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆகிய பதவிகளுக்கு வேட்புமனு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில், மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவில் ஜனநாயகம் இல்லை என்று பலர் கூறி வருகின்றனர். யார் வேண்டுமானாலும் அதிமுகவில் பதவிக்கு வரலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் ஓபிஎஸ், இபிஎஸ் தான், ஜனநாயகம் என்பது அதிமுகவின் தான் உள்ளது என்பதை அனைவரும் அறிந்த ஒன்றுதான். இப்படி இருக்க நடந்த ஒருங்கிணைப்பாளர் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கான உட்கட்சி தேர்தலில் பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் என 30 பேர் பரிந்துரை செய்த பிறகுதான் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால் சிலர் அதிமுகவில் ஜனநாயகம் இல்லை, வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்களேயே தாக்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டுகின்றனர். தகுதியுடையவர்கள் தான் தேர்தலில் நிற்க வேண்டும். எங்கோ "தெருவில் செல்கிற நாய் " நானும் தேர்தலில் நிற்பேன் என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என அவர் பேசியுள்ளார். அவரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை கண்டித்து வருகின்றனர். 

அதிமுகவில் இப்போது உள்ள சீனியர்களான செங்கோட்டையன், துணை முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் எல்லோரையும்விட திண்டுக்கல் சீனிவாசன் சீனியர் ஆவர். ஆனால் சமீபகாலமாக அவரது பேச்சுக்கள்  சர்ச்சையைக் கிளப்பும் வகையில் இருந்து வருகிற. திண்டுக்கல் சீனிவாசன் வாயைத் திறந்தாலே என்ன பேசுவாரோ என்ற பதற்றத்தில் அதிமுகவினர் தள்ளப்படும் நிலையே இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் அம்மா கொள்ளையடித்த பணத்தை தினகரன் செலவு பண்ணிக்கிட்டு இருக்காரு என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருந்தார்.

அதேபோல் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவில் மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் அழைப்பீர்களா என்று திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மற்ற மாநிலங்களில் இருப்பவர்களில் யாருக்கு எம்ஜிஆரை பற்றி தெரியும் என அவர் பேசினார் இது அப்போது பெரும் ஒரு சர்ச்சையை கிளப்பியது. அதேபோல் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது நாங்கள் யாரும் நேரில் சென்று பார்க்கவில்லை, சசிகலா குடும்பத்தினர் எங்களை அனுமதிக்கவில்லை, அம்மா இட்லி சாப்பிட்டார் சட்னி சாப்பிட்டார் என்று நாங்கள் சொன்னதெல்லாம் பொய். நாங்கள் கூறிய பொய்யை மக்கள் மன்னிக்க வேண்டும் என அவர் பேசி இருந்தார். இப்படி அடுக்கடுக்காக சர்ச்சைகளை சகஜமாக பேசி வரும் அவர் லேட்டஸ்டாக " தெருவில் போகிற நாய்" என பேசியிருப்பது தற்போது புது சர்ச்சையாக மாறியுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

நீதிபதிகளை மிரட்ட வெட்கமில்லையா..? ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒன்று திரளும் நீதிபதிகள்..!
இந்தியா முழுவதும் பாகிஸ்தான் கொடியை ஏற்றுவோம்...! யாராலும் எங்களை தடுக்க முடியாது..! LET பயங்கரவாதி கொக்கரிப்பு..!