Jai Bhim:படத்திற்கு பிறகு நான் எங்கு சென்றாலும் என்னை.. மனம் திறந்த ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு.

By Ezhilarasan BabuFirst Published Dec 13, 2021, 5:24 PM IST
Highlights

ஜெய் பீம் படத்தின் இறுதி காட்சி கல்வியன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக கூறினார்.ஜெய் பீம் போன்றே, வழக்குகளை மையமாக கொண்டு பல்வேறு படங்கள் வெளிவந்துள்ளன. 

ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பின்னர் தான் எங்கு சென்றாலும் தன்னை அனைவரும் ஜெய் பீம் சந்துரு என்று அழைக்கிறார்கள் என்றும், அதைக் கண்டு  தான் பெருமை படுவதாகும் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர் தெரிவித்துள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது.

அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவரை எட்டி உதைப்பவர்க்கு 1 லட்சம் பரிசு தர தயாராக இருப்பதாக  பாமக மாவட்ட செயலாளர் ஒருவர் அறிவித்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

ஆனால், அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் ஓயாது என்று அவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் அதற்கு பொருப்பேற்று வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும் அதில் அவர்கள் திருப்தியடைய வில்லை என்றே கூறப்படுகிறது. எனவே இந்த பிரச்சனை இன்னும் முடிவின்றி தொடர்கிறது. இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள ஏத்திராஜ் கல்லூரியில் மனித உரிமைகள் மற்றும் கடமைகள் கல்வி துறை சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு மனித உரிமைகள் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

அப்பொழுது பேசிய அவர், இங்கு தமிழ் தாய் வாழ்த்து பாடும் பொழுது அனைவரும் எழுந்து நின்றார்கள் தமிழ்,தெரியாதவர்கள் கூட இங்கு நின்றார்கள் ஏனென்றால் அது தமிழுக்கு கொடுக்கும் மரியாதை. மனித உரிமைகள் தினம் என்பது வருடம் ஒறுமுறை மட்டும் இல்லாமல் 365 நாட்களுக்குமான தேவை உள்ளது. தமிழ் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க தேவை இல்லை என்ற மதுரை உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்தார். பொழுதுபோக்கிற்காக சினிமா திரையரங்கத்திற்கு சென்றவர்களை தேசிய கீதம் பாட சொல்லி பலரால் நிற்பந்திக்கபட்டதாக கூறினார். ஜெய் பீம் படத்தில் தணிக்கை குழு 46க்கும் மேற்பட்ட சிறை காட்சிகளை நீக்க வலியுறுத்தியதாக கூறினார். குழந்தை தொழலாளர்களை ஹோட்டல்,பெட்ரோல் பங்க், பாட்டாசு ஆலை, மெக்கானிக் கடைகளில் தன்னால் நேரடியாக பார்க்க முடிகிறது இது மேலும் அதிகரிப்பதாக கூறினார்.

ஜெய் பீம் படத்தின் இறுதி காட்சி கல்வியன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக கூறினார்.ஜெய் பீம் போன்றே, வழக்குகளை மையமாக கொண்டு பல்வேறு படங்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டில் மயனாங்கள் கூட பொதுவாக இல்லை எனவும்,இன்னும் பாலின வேறுபாடுகள் நம்மிடையே இருப்பதாகவும் அவர் கூறினார். நல்ல செய்திகள் சினிமா மூலம் சென்றாலும் தவறில்லை என்றும், நம் நாட்டில் பெண்களை தெய்வங்களாக வழிபடுபவர்கள்,அதேசமயம் பெண்கள் அர்ச்சகராவதை எதிர்க்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்துள்ளார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உள்ள போதிலும் சபரிமலை சென்று பெண்கள் வழிபடுவதை எதிர்க்கிறார்கள், கிராமத்திற்குள் இரு கிரமங்கள் உள்ளது. அதிலும் பலங்குடியினர் மிகவும் ஒடுக்கபடுவாதாக  கிராமத்திற்கு நிலவும் சாதி வேறுபாடுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகாக நான் எங்கு சென்றாலும் அனைவரும் என்னை ஜெய்பீம் சந்துரு என்று அழைக்கிறார்கள்.அதை கண்டு நான் பெருமைப்படுகிறேன். என்கவுண்டர் போன்ற மனித உரிமை மீறல் காட்சிகளை சினிமாக்கள் ஊக்குவிப்பதாக தெரிவித்தார். திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் சட்டம் ஒழுங்கு மற்றும் நீதி சம்பந்தமான காட்சிகள் வெரும் கை தட்டல்களுக்காக மட்டுமே தவிர, அவை அனைத்து நடைமுறையில் உண்மையில்லை. ஜெய் பீம் படத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெரும் வாய்வார்த்தைக்காக பாராட்டவில்லை என்றும் குரவர் சமூகத்தினரோடு தீபாவளி கொண்டாடியது பாராட்டுதல் குறியது என்றும் அவர் கூறினார்.
 

click me!