கொடநாடு கொலை வழக்கில் ஜெயக்குமார் பற்றி நாங்கள் ஏதாவது பேசினோமா? ஜெயக்குமார் ஏன் இதற்கு கருத்து தெரிவிக்க வேண்டும். சின்னம் இருக்கும் திமிரில் அதிமுகவினர் ஆடுகின்றனர்.
காங்கிரஸ் அல்லது பாஜக உடன் கூட்டணி அமைக்கலாம். தனித்துப் போட்டியிடவும் தயாராக உள்ளோம். நவம்பர் டிசம்பரில் கூட்டணி தொடர்பாக முடிவெடுப்போம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கொடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகளை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதேபோல், சில மாதங்களுக்கு முன் சட்டப்பேரவையில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் எந்த கொம்பனாக இருந்தாலும் விடமாட்டோம் என்றார்.
இதையும் படிஙு்க;- கைவிரித்த உச்சநீதிமன்றம்? பறிபோகிறது ஓ.பி.ரவீந்திரநாத்தின் எம்.பி. பதவி?
ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகிறது. ஆகையால், உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டுப்பிடித்து கைது செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் போராட்டம் நடத்தினோம். ஆனால், கே.பி.முனுசாமி, தெர்மாகோல் செல்லூர் ராஜூ ஆகியோர் உளறுகின்றனர். ஜெயக்குமார் எதற்கு சந்துல சிந்து பாடணும். கொடநாடு கொலை வழக்கில் ஜெயக்குமார் பற்றி நாங்கள் ஏதாவது பேசினோமா? ஜெயக்குமார் ஏன் இதற்கு கருத்து தெரிவிக்க வேண்டும். சின்னம் இருக்கும் திமிரில் அதிமுகவினர் ஆடுகின்றனர்.
இதையும் படிஙு்க;- குடிகாரன் சி.வி.சண்முகம்! இன்னொருமுறை இப்படி குறிப்பிட்டா நடவடிக்கை தான்! அண்ணாமலையை எச்சரிக்கும் OPS அணி.!
தொண்டர்களின் விசுவாசம் தான் ஒரு கட்சியின் அச்சாணி. இவர்களுக்கு விஸ்வாசம் என்னவென்றால் தெரியாது. என்னை கட்சியிலிருந்து நீக்கி 6 ஆண்டுகள் ஆகிறது. நான் தனி கட்சி தொடங்கிய ஆறு வருடம் ஆகிறது. தலையில் தொப்பி வைத்தால் எம்ஜிஆர் ஆகிவிடுவாரா? எடப்பாடி பழனிசாமி. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நவம்பர் மாதத்தில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்போம். அது காங்கிரசுடனோ அல்லது பாஜக கூட்டணியிலோ இடம்பெறலாம். அல்லது தனித்துக் கூட போட்டியிடலாம். அது குறித்து நவம்பரில் அறிவிப்போம் என டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.