முதல்வர் ஸ்டாலின் அரசு இலக்கு ஏதும் வைத்துள்ளதா? மாதம் ஒருவரை உயிரிழக்க வைக்க.. வெளுத்து வாங்கும் அண்ணாமலை.!

By vinoth kumarFirst Published Jan 17, 2022, 7:29 AM IST
Highlights

 தமிழகத்தில் மாதம் குறைந்தபட்சம் ஒருவராவது காவல்துறையினரின் அடக்குமுறை காரணமாக உயிரிழக்க வேண்டும் என்று  இந்த அரசு இலக்கு ஏதும் வைத்துள்ளதா? 

தமிழகத்தில் மாதம் குறைந்தபட்சம் ஒருவராவது காவல்துறையினரின் அடக்குமுறை காரணமாக உயிரிழக்க வேண்டும் என்று  இந்த அரசு இலக்கு ஏதும் வைத்துள்ளதா? என அண்ணாமலை காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் கருப்பூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (45). மாற்றுத்திறனாளியான இவரை திருட்டு வழக்கில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீசார் கடந்த 11-ம் தேதி கைது செய்து அந்த மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர். 12-ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் திடீரென உயிரிழந்தார். 

இது தொடர்பாக பிரபாகரனின் சகோதரர் சக்திவேல் சேலம் அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, மாஜிஸ்திரேட் கலைவாணி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து பிரேத பரிசோதனையும் நடைபெற்றதையடுத்து 3 போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், வழக்கம் போல் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு இடைநீக்கம் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு என்று கடந்து செல்வது மட்டும் அரசின் வேலை இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழகத்தில் மாதம் குறைந்தபட்சம் ஒருவராவது காவல்துறையினரின் அடக்குமுறை காரணமாக உயிரிழக்க வேண்டும் என்று  இந்த அரசு இலக்கு ஏதும் வைத்துள்ளதா? 

இன்று பிரபாகரன் அவர்களது குடும்பம் சிதைந்து கிடக்கிறது. வழக்கம் போல் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு இடைநீக்கம் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு என்று கடந்து செல்வது மட்டும் அரசின் வேலை இல்லை. 

காவல்துறை உங்கள் எதிரி என்று மாறுவதற்கு முன், காவல்துறையின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு அதற்கு தீர்வு காண ஒரு ஆணையம் அமைத்து அதன் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்துங்கள் @CMOTamilnadu அவர்களே என அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.

click me!