யார் யாருக்கெல்லாம் ரூ.10000 நிதியுதவி தெரியுமா..? அடிச்சுத்தூக்கும் அதிரடி அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jun 11, 2020, 2:04 PM IST
Highlights

ஆந்திராவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள் மற்றும் தையல்காரர்களுக்கு தலா 10000 ரூபாய் வழங்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திராவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள் மற்றும் தையல்காரர்களுக்கு தலா 10000 ரூபாய் வழங்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத்தும்  மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் பல்வேறு சாமானிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு ஆந்திராவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாமானியர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் நிதியுதவிகளை அறிவித்துள்ளார். அதாவது இலவச திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். 

சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், தையல்காரர்கள் என 2.47 லட்சம் பேருக்கு ஒருவருக்கும் ரூ.10,000 வழங்க உத்தரவிட்டுள்ளார். இதற்காக 247 கோடி நிதியை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஒதுக்கியுள்ளார். 

click me!