கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்திட்டாரு.. பாஜகவில் இருந்து தூக்கி எறியப்பட்ட டாக்டர் சரவணன்.. அண்ணாமலை அதிரடி.!

Published : Aug 14, 2022, 10:54 AM ISTUpdated : Aug 14, 2022, 10:59 AM IST
கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்திட்டாரு.. பாஜகவில் இருந்து தூக்கி எறியப்பட்ட டாக்டர் சரவணன்.. அண்ணாமலை அதிரடி.!

சுருக்கம்

 மதுரை நகர், மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார். 

மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன் கட்சியில் இருந்த நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க;- ஓஹோ நாளைக்கு பேசலாம் சொன்னதன் அர்த்தம் இதுதானோ.. 12 மணி நேரத்தில் பாஜக அலறவிடும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

இந்நிலையில், மதுரையில் நடந்த சம்பவத்திற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நள்ளிரவில் சந்தித்து மதுரை பாஜக தலைவர் டாக்டர் சரவணன் மன்னிப்பு கோரினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் சரவணன்;- பாஜகவில் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கு உள்ளது. இருப்பினும் மன உளைச்சலுடன் தான் பாஜகவில் பயணித்துக்கொண்டு இருக்கிறேன். அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு நேர்ந்த சம்பவத்தால் தூக்கம் வரவில்லை. அதனடிப்படையில் தான் இரவில் அவரை சந்தித்து என்னுடைய  வருத்தத்தை தெரிவித்தேன்.

இதையும் படிங்க;- செருப்பு வீச்சு சம்பவத்தை தூண்டியதே டாக்டர் சரவணன் தான்... பாஜக பகீர் குற்றச்சாட்டு

பாஜகவில் தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை. பாஜகவில் மத அரசியல் கடுமையாக இருக்கிறது என தெரிவித்தார். இந்நிலையில், எந்த நேரத்திலும் கட்சியில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கப்படுவார் என கூறப்பட்டு வந்தத நிலையில் ததற்போது கட்சியில் இருந்த நீக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்:- மதுரை நகர், மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார். எனவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  பாஜகவின் இந்த வன்முறை அரசியல் ஆபாசமானது.. அருவருக்கத்தக்கது.. கொதிக்கும் ஜோதிமணி..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..
நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!