வெளியானது தகவல்...! பொன். ராதாவை தடுத்து நிறுத்திய ஐபிஎஸ் யதீஷ் சந்திரா யார் தெரியுமா..?

By thenmozhi gFirst Published Nov 22, 2018, 12:38 PM IST
Highlights

சபரிமலை சென்ற பொன் ராதா கிருஷ்ணனை தடுத்து நிறுத்திய ஐ பி எஸ் அதிகாரியின்  பின்னணி தகவல் தற்போது  வெளியாகி உள்ளது. இவர் இது போன்ற சர்ச்சையில் சிக்குவது  புதிதல்ல....யாருக்கும்  அஞ்சாமல் எந்த கட்சியாக இருந்தாலும் சரி எதிர்த்து  நின்று நடவடிக்கையில் ஈடுபடுபவராம்.

சபரிமலை சென்ற பொன் ராதா கிருஷ்ணனை தடுத்து நிறுத்திய ஐபிஎஸ் அதிகாரியின் பின்னணி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவர் இது போன்ற சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல....யாருக்கும்  அஞ்சாமல் எந்த கட்சியாக இருந்தாலும் சரி எதிர்த்து நின்று நடவடிக்கையில் ஈடுபடுபவராம்.

கர்நாடகாவில் பிறந்து கேரளாவில் எஸ்.பியாக நியமிக்கப்பட்டு இருக்கும் யதீஷ் சந்திரா, 2015 இல் கேரளாவின் அங்கமாலி பகுதியில் நடந்த போராட்டத்தின் போது, கம்யூனிஸ்டுகள் மீது லத்தி தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்...அப்போது கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி தான் நடைப்பெற்றது. அப்போது, கம்யூனிஸ்டுகள் நடத்திய பெரும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு  இவருக்கு  இருந்தது. அப்போது போரட்டத்தை  கட்டுபடுத்த கம்யூனிஸ்டுக்கு எதிராக லத்தி சார்ஜ் எடுத்தவர் தான் இவர்.அப்போது இப்படி ஒரு அதிகாரியா என  பாஜக வே  சற்று வியப்பாக பார்த்தது.

முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தன், யதீஷ் சந்திராவை ''பைத்தியகார நாய்'' என்று கூட திட்டி உள்ளார். கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் பலர் இவர் மீது பெரும் கோபத்தில் இருந்து உள்ளனர். இந்த ஐபிஎஸ் அதிகாரியை பணியில் இருந்து நீக்க வேண்டும் என தற்போதைய முதல்வரான பினராயி விஜயன் கடும் கண்டனத்தை முன் வைத்தார்.

இதனை அடுத்து, 2017 ஜனவரியில் எர்ணாகுளத்தின் SP யாக நியமிக்கப்பட்டார் யதீஷ் சந்திரா.பின்னர் சென்ற ஆண்டு எர்ணாகுளத்தில் நடந்த பந்தின் போது, காங்கிரஸ் கட்சியினர் மீது லத்தி சார்ஜ் செய்தார். இதில் பலரும் காயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிகப்பட்டனர்.இதனால் இவர் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பது கூடுதல் தகவல்.

இந்த நிலையில் தான் தற்போது, பொன் ராதவை சபரிமலைக்கு செல்லும் போது தடுத்த விவகாரத்தில் சிக்கி உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இதற்கு முன்னதாகவே கேரளா மாநில பாஜக பொதுச் செயலாளர் கே. சுரேந்திரனனை கைது செய்ததும் இவர்தான். இவரது இந்த நடவடிக்கைக்கு ஆளும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆதரவு அதிக அளவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சபரிமலை செல்லும் போது தடுத்ததில் ஒரு லாஜிக் உள்ளது. ஆனால் திரும்பி வரும் போது எதற்காக தடுத்தார்கள் என்பதில் உள்குத்து உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த ஐபிஎஸ் அதிகாரியின் செயல் என  பல கட்சித்தலைவர்கள் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளனர்.

click me!