ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரவிச்சந்திரன் கஜா புயல் நிதிக்கு 5,000 வழங்குகிறார்...

By vinoth kumarFirst Published Nov 22, 2018, 12:35 PM IST
Highlights


கஜா புயல் நிவாரண நிதிக்கு நேற்று நளினி ரூ.ஆயிரம் அறிவித்திருந்த நிலையில்,  ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரவிச்சந்திரனும் ரூ.ஐயாயிரத்தை நிவாரண நிதியாக வழங்க முன்வந்துள்ளார்.


கஜா புயல் நிவாரண நிதிக்கு நேற்று நளினி ரூ.ஆயிரம் அறிவித்திருந்த நிலையில்,  ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரவிச்சந்திரனும் ரூ.ஐயாயிரத்தை நிவாரண நிதியாக வழங்க முன்வந்துள்ளார்.

ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேர்களில் ஒருவரான  ரவிச்சந்திரன் மதுரை  மத்திய சிறையில் இருக்கிறார். ராஜீவ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ‘91ம் ஆண்டு முதல் 27 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கைத் தமிழரான ரவிச்சந்திரன் ஏற்கனவே ஒருமுறை ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ரூ.இருபதாயிரம் நன்கொடை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று தனது வழக்கறிஞர் மூலம் கஜா புயல் நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பாக, சிறையில் தனது உழைப்புக்கு ஊதியமாகக் கிடைத்த தொகையிலிருந்து, ரூ ஐயாயிரத்தை வழங்க முன்வந்துள்ளார் ரவிச்சந்திரன்.

நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் பங்களிக்கும் தொகை மிகச்சிறியதே எனினும் 27 ஆண்டுகளாக  சிறையில் வாடிவரும் நிலையிலும் புயலிலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாங்களும் ஏதாவது ஒருவகையில் உதவவேண்டும் என்று நினைக்கிறார்களே என்பதே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் ஆறுதல்.

click me!