சிறையில் இருந்து வந்ததும் ஷாருக்கான் மகன் என்ன செய்யப்போகிறாராம் தெரியுமா..?

Published : Oct 20, 2021, 11:23 AM IST
சிறையில் இருந்து வந்ததும் ஷாருக்கான் மகன் என்ன செய்யப்போகிறாராம் தெரியுமா..?

சுருக்கம்

சிறையிலிருந்து விடுதலையான பிறகு, நீங்கள் பெருமைப்படும் படியான நல்ல பணிகளை செய்வேன்

சிறையில் இருந்து விடுதலை ஆனதும் ஏழைகளின் நலனுக்காகவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவேன் என ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தெரிவித்துள்ளார்.

ஆர்யன் கான், சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்தில் கலந்துகொண்டதால் கடந்த 3ம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும், தொண்டு நிறுவனத்தினரும் கவுன்சிலிங் அளித்ததாக கூறப்படுகிறது. 

அவர்களிடம் ‘சிறையிலிருந்து விடுதலையான பிறகு, நீங்கள் பெருமைப்படும் படியான நல்ல பணிகளை செய்வேன்’ என்று ஆர்யன் கான் உறுதி அளித்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழைகளின் நலனுக்காகவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவேன். தீய வழிகளில் இனி செல்ல மாட்டேன்’’ எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆர்யன் கானுக்கு ஏற்கனவே ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அவரது ஜாமீன் மனு மீது விசாரணை நடக்க உள்ளது.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!