கல்யாண ராமனை கைது செய்தபோது, வாரண்ட் கேட்டு போலீசை தெறிக்கவிட்ட பாஜக பெண் .. காவல் ஆணையரகத்தில் கதறல்.

By Ezhilarasan Babu  |  First Published Oct 20, 2021, 11:14 AM IST

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுமதி வெங்கடேசன், கடந்த 16ம் தேதி இரவு பாஜக செயற்குழு உறுப்பினரான கல்யாணராமனை வளசரவாக்கம் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்யப்போவதாக தகவல் வந்ததையடுத்து அங்கு சென்று கைது செய்வதற்கு வாரண்ட் உள்ளனவா என்று போலீசாரிடம் கேட்டேன், 


பாஜக கல்யாண ராமனை போலீசார்  கைது செய்ய முயற்சித்தபோது அதில் குறுக்கிட்ட தன்னை பெண் என்றும் பாராமல்  தள்ளிவிட்டு தாக்க முயன்ற உதவி ஆணையர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாஜக பெண் பிரமுகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக ஆபாசமாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் முதல்வர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவு செய்துவந்தார் கல்யாணராமன்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: வசமாக சிக்கிய மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்.. இந்த முறை தப்பிக்கவே முடியாது..? மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சம்மன்

அதேபோல திரைப்பட நடிகையும், மருத்துவருமான ஷர்மிளாவை மிகவும் கடுமையாக விமர்சித்தார். அந்தவகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மற்றும் திமுகவின் தர்மபுரி எம்பி செந்தில்குமாரின் உதவியாளர் சந்தோஷ் ஆகியோர் கல்யாணராமன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், பாஜகவை சேர்ந்த மாநில செயலாளர் சுமதி என்பவர் தலைமையில் சுமார் 50க்கு மேற்பட்ட பாஜகவினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அதில், காவல் உதவி ஆணையாளர்களான கலியன் மற்றும் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க அவர் வலியுறுத்தியுள்ளார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுமதி வெங்கடேசன், கடந்த 16ம் தேதி இரவு பாஜக செயற்குழு உறுப்பினரான கல்யாணராமனை வளசரவாக்கம் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்யப்போவதாக தகவல் வந்ததையடுத்து அங்கு சென்று கைது செய்வதற்கு வாரண்ட் உள்ளனவா என்று போலீசாரிடம் கேட்டேன், அப்போது காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது உதவி ஆணையாளர்களான கலியன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், பெண்ணென்றும் பாராமல் கீழே தள்ள முயன்றனர். அதேபோல் என்னை ஒருமையில் பேசி தாக்க முயன்றனர். 

இதையும் படியுங்கள்: " நெல் கொள்முதலில் மெகா கொள்ளை... மௌனம் காக்கும் மந்திரிகள் " மநீம பகீர்.

இது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பெண்களைப் பாதுகாக்க வேண்டிய போலீசே பெண்ணை தாக்க முற்படுவது கண்டிக்கக் கூடிய செயல் என்று அவர் கூறினார். தன்னை தாக்க முயற்சித்ததற்கான வீடியோ ஆதாரங்களை துணை ஆணையரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், உதவி ஆணையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 
 

click me!