மேகதாது விவகாரத்தில் அண்ணாமலையை நேருக்கு நேர் கலாய்த்தாரா அன்புமணி..?? என்ன சொன்னார் தெரியுமா.?

Published : Jun 10, 2022, 04:10 PM ISTUpdated : Jun 10, 2022, 04:18 PM IST
மேகதாது விவகாரத்தில் அண்ணாமலையை நேருக்கு நேர் கலாய்த்தாரா அன்புமணி..?? என்ன சொன்னார் தெரியுமா.?

சுருக்கம்

கர்நாடக மாநில அரசிடம் சொல்லி மேகதாது அணை கட்டுவதை நிறுத்தலாலே என அண்ணாமலையிடம் தான் கூறியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவரான நிலையில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். 

கர்நாடக மாநில அரசிடம் சொல்லி மேகதாது அணை கட்டுவதை நிறுத்தலாலே என அண்ணாமலையிடம் தான் கூறியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவரான நிலையில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். 

அதிமுக- திமுக என கூட்டணி வைத்து  வந்த பாமக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. பல விஷயங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பாமக நிலைப்பாடு எடுத்து வருகிறது, இது ஒருபுறமுள்ள நிலையில் பாமக  தலைவராக பொறுப்பேற்ற நிலையில் அன்புமணி ராமதாஸ் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அவரின் இந்த சந்திப்பு பல்வேறு  யூகங்களுக்கு வழிவகுத்தது. அன்புமணி ராமதாஸ் பிரதமரை சந்தித்து என்ன பேசினார் எதற்கான சந்திப்பு என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றதாகவும், குறிப்பாக கோதாவரி காவிரி பிரச்சினைக்காக பிரதமரை சந்தித்ததாகவும், அது சம்பந்தமாக அவரிடம் கோரிக்கை வைத்ததாகவும் அன்புமணி ராமதாஸ் இன்று காலை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், கடந்த ஆண்டு சூதாட்டத்தின் மூலமாக 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஆன் லைன் ரம்பி நிறுவனத்திற்கு லாபம் கிடைத்துள்ளது. அதில் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியாக 3 ஆயிரம் கோடியை அந்நிறுவனம் செலுத்தியுள்ளது. இந்த ஆண்டு அந்நிறுவனத்தின் வருவாய் 15 ஆயிரம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இரண்டு ஆண்டு காலத்தில் 40 ஆயிரம் கோடியாக உயரும் என்கிறார்கள், இந்த 40 ஆயிரம் கோடி என்பது சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களின் பணம்  என்றார். தொடர்ந்து பேசி அவர் தமிழகம் மதுபானத்தால் சீரழிகிறது, எனவே முதலமைச்சரை சந்தித்து மதுவை ஒழிக்க வலியுறுத்துவேன், திமுக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர் அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது மேகதாது விவகாரம் குறித்து கேட்ட கேள்விக்கு அண்ணாமலையிடம் மேகதாது அணை கட்ட வேண்டாம் என உங்கள் நண்பரான கர்நாடகாவிடம் பேசி அதைத் தடுக்கக் கூடாதா? உங்கள் நண்பர்கள் தானே கர்நாடகாவில் ஆட்சி செய்கின்றனர் நீங்கள் மேகதாது அணை கட்ட வேண்டும் என கோரிக்கை வைக்க கூடாதா? என அண்ணாமலையிடம் தான் நட்புரீதியாக கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, அண்ணாமலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அண்ணாமலை  இன்னும் போலீஸ் அதிகாரியாகவே நடந்து கொள்கிறார், அவர் தனது போலீஸ் தொப்பியை கழட்டி வைக்க வேண்டும் என எச்சரிக்கும் வகையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  
 

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!