மோடி- அமித்ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

By Thiraviaraj RMFirst Published Oct 15, 2020, 5:37 PM IST
Highlights

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சொத்து மதிப்பில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல், அவரின் அசையும் சொத்துக்கள் ரூ.1.97 கோடி எனவும், அசையா சொத்துக்கள் ரூ.2.97கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நிர்மலா சீதாராமன் தனது கணவர் மற்றும் தன்னுடைய பெயரில் ஒரே ஒரு வீடு மற்றும் பழைய ஸ்கூட்டர் மட்டுமே வைத்திருப்பதாக சொத்து மதிப்பு விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதேபோல், பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் சொத்து மதிப்பும் வெளியாகியுள்ளது.

 பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு ரூ.2.49 கோடியாக இருந்த மோடியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு ரூ.36 லட்சம் உயர்ந்து ரூ.2.85 கோடியாக உள்ளது. அவரது வங்கி டெபாசிட்டுகள் ரூ.3 லட்சம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் போன்ற முதலீடுகளில் இருந்து கிடைத்த வருமானம் ரூ.33 லட்சம் காரணமாக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. ஜூன் 2020 காலத்தில் மோடியின் கையிருப்பு ரூ.31,450 ஆகும். அவரது காந்தி நகர் எஸ்.பி.ஐ., வங்கி கணக்கில் பிக்சட் டெபாசிட் மற்றும் இதர டெபாசிட்டுகள் ரூ.1.6 கோடி வைத்துள்ளார். நான்கு மோதிரங்கள் உட்பட 45 கிராம் தங்கம் என மொத்த அசையும் சொத்து ரூ.1.75 கோடி உள்ளதாக கூறியுள்ளார்.

இதேபோல், கடந்த ஆண்டு ரூ.32.3 கோடியாக இருந்த அமித்ஷாவின் சொத்து மதிப்பு இந்தாண்டு ரூ.28.63 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக அமித்ஷா சொத்து மதிப்பு சரிந்துள்ளது. கையிருப்பாக ரூ.15,814 வைத்துள்ளார். அவர் வங்கி கணக்கில் ரூ.1.04 கோடி உள்ளது. டெபாசிட் கணக்கில் ரூ.2.79 லட்சம் உள்ளது. ரூ.13.47 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ், பென்சன் பாலிசிகளும், ரூ.44.47 லட்சம் மதிப்பிலான நகைகளும் உள்ளதாக கூறியுள்ளார். பரம்பரை சொத்து உட்பட ரூ.13.56 கோடிக்கு 10 அசையா சொத்துக்கள் அமித்ஷா பெயரில் உள்ளன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கணவர் மற்றும் தன்னுடைய பெயரில் கூட்டாக ரூ.99.36 லட்சம் மதிப்பிலான குடியிருப்பு உள்ளது என்றும் ரூ.16.02 லட்சத்துக்கு நிலம் உள்ளது என்றும் கூறியுள்ளார். 19 ஆண்டு வீட்டுக் கடன் மற்றும் அடமானக் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் இல்லை, ஆந்திர பதிவு எண் கொண்ட பஜாஜ் சீட்டாக் ஸ்கூட்டர் வைத்திருப்பதாக நிர்மலா சீதாராமனின் சொத்து விவரங்களில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல்,மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சொத்து மதிப்பில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல், அவரின் அசையும் சொத்துக்கள் ரூ.1.97 கோடி எனவும், அசையா சொத்துக்கள் ரூ.2.97கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜ்நாத் சிங்கிடம் 2 துப்பாக்கிகள் இருப்பதாகவும், அவரது மனைவி சாவித்ரியின் பெயரில் ரூ.54.41 லட்சம் சொத்து மதிப்பு இருப்பதாக பிரதமர் அலுவலகம் விவரம் வெளியிட்டுள்ளது

click me!