அப்பாவுக்கு சொத்து கம்மி... மகனுக்கு அதிகம்.. உதயநிதியைவிட மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

Published : Mar 15, 2021, 10:25 PM ISTUpdated : Mar 16, 2021, 09:17 AM IST
அப்பாவுக்கு சொத்து கம்மி... மகனுக்கு அதிகம்.. உதயநிதியைவிட மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

சுருக்கம்

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உட்பட 59 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இன்று ஏராளமான வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.  அந்த மனுவில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி மு.க ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூ.4.94 கோடி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அசையா சொத்து மதிப்பு 1.17 கோடி எனவும், அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் 53 லட்சம் மதிப்பில் அசையும் அசையா சொத்துகள் உள்ளன என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 2016-ம் ஆண்டைவிட மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு 20 லட்சம் அதிகரித்துள்ளது. அதேபோல, சேப்பாக்கத்தில் போட்டியிடும் உதயநிதியின் சொத்து 28 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதியின் சொத்து மதிப்பைவிட ஸ்டாலினின் சொத்து மதிப்பு குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மு.க.ஸ்டாலின் மீது 45 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Women Free Bus Travel: பெண்களுக்கு இலவச பயணம்.! எந்த பேருந்துகளில் கட்டணம் கிடையாது?
Free 3 LPG Cylinders Per Year: விலையில்லாமல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்.! யாருக்கு கிடைக்கும் தெரியுமா?