இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் டெல்லி செல்ல உள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று காலையில் டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றிருக்கும் அவர் மூன்று நாள் பயணமாக டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 28 ஆம் தேதி அவர் சென்னை திரும்புகிறார் என்று கூறப்படுகிறது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் எந்த விஷயமாக டெல்லி சென்றுள்ளார் என்று தெரியவில்லை. அதேபோல எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார்.அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. ஓபிஎஸ் திருச்சியில் மாநாடு நடத்தியுள்ளார். அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்று ஓபிஎஸ் தரப்பு நினைத்து கொண்டிருக்கும் சமயத்தில், டெல்லி செல்ல உள்ளார் எடப்பாடி.
டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். இதுகுறித்து பல தகவல்கள் வெளியான நிலையில், தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்," முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு 3.6.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என்று முதல்வர் அறிவித்தார்.
இதையும் படிங்க..மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை.. முழு விபரம்.!!
அதன்படி, இம்மருத்துவமனைக் கட்டடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை போன்ற உயர்சிறப்பு பிரிவுகளை கொண்டுள்ளது.
இம்மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு (27.4.2023) சென்னையிலிருந்து புதுதில்லி புறப்பட்டுச் சென்று, நாளை மறுநாள் (28.4.2023) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட அழைப்பு விடுக்கிறார்.அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இப்பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..இப்படியா பண்றது.! பிரதமர் தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலில் போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் எம்.பி..!