
மு.க.ஸ்டாலின் நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில், கொரோனா தொடர்பாக சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகின. பால்கடைகள், மருந்து கடைகள், மளிகைகடைகள், உணவகங்கள் உள்ளிட்ட சில கடைகள் திறக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் , மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு மூடப்படும் டாஸ்மாக் கடைகள், இந்த கெடுபிடிக்கு மத்தியிலும், காலை 8மணிக்கு திறக்கப்பட்டு, பகல் 12 மணிக்குமூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே விடுத்த அறிக்கை.
ஏற்கெனவே கொடுரோனா தொற்று அதிகரிருத்து வரும் நிலையில், திமுக ஆட்சி அமைவதற்கு முன்னால் கொரோனா கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், டாஸ்மாக் கடைகளுக்கு விடப்பட்டுள்ள உத்தரவில் காலை 8 மணி முதல் 12 மணி வரை திறக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
எட்டு மணிக்கே சாராய கடையை திறந்து ஏழை எளியோரின் குடியை கெடுக்கும் மு.க ஸ்டாலின் என கருத்து தெரிவித்துள்ள பலரும் சமூகவளைதளமான ட்விட்டர் பக்கத்தில் #குடிகெடுக்கும்_ஸ்டாலின் என்கிற ஹேஸ்டாக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.