விக்கல் வந்தால் நிறுத்த உடனே இதை செய்யுங்கள் போதும்.. ரொம்ப சிம்பிள் மக்களே..

By Ezhilarasan BabuFirst Published Feb 2, 2021, 6:09 PM IST
Highlights

விக்கல் தொடங்கியவுடன் தரையில் உட்கார்ந்தபடி உங்கள் முழங்கால்களை மார்பை தொடும் வகையில் அனைக்கவும், இதைச் செய்வதன் மூலம் நுரையீரலுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது மற்றும் தசை சுருக்கம் அகற்றப்படும்,  சிறிது நேரம் இப்படி செய்வதன் மூலம் விக்கல் பிரச்சனை உடனே நீங்கும்.

ஒரு மனிதருக்கே விக்கல் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம், விக்கல் பெரும்பாலும் நகைப்புக்குரியதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் விக்கல் ஏற்படுபவர்களுக்குதான் அதன் சிரமம் புரியும். விக்கல் ஏற்பட்டவர்கள் அதை எப்படியாவது உடனே நிறுத்த வேண்டும் என முயற்சிப்பதை பார்க்கமுடியும். ஆனால் அந்த விக்கல் எப்படி ஏற்படுகிறது, அதை எப்படி நிறுத்துவது என்பது இன்றளவும் விடைதெரியாத கேள்வியாகவே உள்ளது. சில நேரங்களில் மாறிவரும் வானிலை அல்லது உடல் மாற்றங்கள் காரணமாக விக்கல் ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

விக்கல் எடுக்கும் போது தண்ணீர் அருந்துவதாலும், தியானம் செய்வதாலும் அது உடனே நின்று விடும் என பலர் கூறக்கேட்போம், ஆனால் அப்படி செய்தாலும் கூட விக்கல் நிறுத்தப்படுவதில்லை. தொடர் விக்கல் மனிதனை சோர்வடைய வைத்து விடுகிறது. ஆனால் இந்த விக்கலை உடனே நிறுத்துவது எப்படி என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் தெரிவிப்பதாவது. 

விரல்களை வாயில் வைத்தால் விக்கல் நின்று விடும்:

உங்களுக்கு தொடர்ந்து விக்கல் எடுக்கும் போது நீங்கள் வாயில் உங்கள் கை விரலை வைக்கலாம்,  இது கேட்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் இதை நம்பியாக வேண்டும் என்கின்றனர். இது உண்மையிலேயே விக்கலை நிறுத்த ஒரு சிறந்த வழியாகும், திடீரென்று நிறைய விக்கல் ஏற்படும்போது அதற்கு தீர்வு இல்லை என்றால் உங்கள் விரல்களை வாயில் வைக்கவும், அதேநேரத்தில் இந்த செயல்முறையை செய்யும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும், இல்லையெனில் விரல்கள் காயப்படும் அளவிற்கு கூட செல்லலாம்,  ஆனால் இந்த முறையை நன்கு முயற்சி செய்து விக்கலுக்கு உடனடி தீர்வு காணமுடியும் என்கின்றனர். 

 

முழங்கால்களை மார்போடு அணைக்கவும்:

விக்கல் தொடங்கியவுடன் தரையில் உட்கார்ந்தபடி உங்கள் முழங்கால்களை மார்பை தொடும் வகையில் அணைக்கவும், இதைச் செய்வதன் மூலம் நுரையீரலுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது மற்றும் தசை சுருக்கம் அகற்றப்படும்,  சிறிது நேரம் இப்படி செய்வதன் மூலம் விக்கல் பிரச்சனை உடனே நீங்கும்.

தேன் சாப்பிடுங்கள்:

சிறு குழந்தைகளுக்கு விக்கல் வர ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு உடனடியாக விரலில் சிறிது தேன் தடவி  நக்க வைக்க வேண்டும், அதனால் உடனே தீர்வு ஏற்பட்டு குழந்தைகள் இயல்பாக விளையாட ஆரம்பிப்பர், இதேபோல் பெரியவர்களுக்கும் விக்கல் ஏற்பட்டால் அவர்கள் தேன் சாப்பிட வேண்டும், திடீரென உடலுக்கு  தேனின் இனிப்பு நரம்பு மண்டலத்தை சமன் செய்வதால் விக்கல் உடனே நிற்கும்.

 

சிறிய அளவிலான எலுமிச்சை துண்டை சுவையுங்கள்:

மது அருந்திய நபர்களுக்கு திடீரென விக்கல் வர ஆரம்பிக்கும் பட்சத்தில் அவர்கள் எலுமிச்சையை உட்கொள்ளும் படி கேட்கபடுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்,  ஆம்.. உடனே விக்கல் ஏற்படும் பட்சத்தில் நான்கில் ஒரு பங்கு எலுமிச்சை துண்டை எடுத்து வாயில் சுவைக்க வேண்டும். 

அதை சிறிது நேரம் வாயில் வைத்திருப்பதன் மூலம் விக்கல் தானாகவே நின்றுவிடும். இப்படியான முறைகளில் உடனே விக்கலுக்கு நிவாரணம் பெறமுடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பின்பற்றி பயனடையுங்கள்.  

 

click me!