மூச்சுத்திணறி செத்தாலும் சாவோம்... உங்க மருந்து வேண்டாம்... உதவ வந்த சீனாவை உதாசீனப்படுத்தும் இந்தியா..!

By Thiraviaraj RMFirst Published Apr 23, 2021, 12:45 PM IST
Highlights

ஆனால் இதை ஏற்க இந்தியா தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிங்கப்பூர், அரபு நாடுகளிடம் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்ய இந்தியா ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைக்கத் தயார் என சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருகிறது.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருவதால், மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலைவி வருகிறது. இந்நிலையில், கொரோனாவின் தற்போதைய தாக்கதை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தயாராக உள்ளது. இந்தியாவின் சமீபத்திய மோசமான நிலை குறித்து சீனா கண்காணித்து வருகிறது. மருத்துவ பொருட்களின் பற்றாக்குறையில் இருக்கும் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம் என சீனா தெரிவித்துள்ளது.

ஆனால் இதை ஏற்க இந்தியா தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிங்கப்பூர், அரபு நாடுகளிடம் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்ய இந்தியா ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, கொரோனாவின் தாக்கத்தை எதிர்கொண்டு வரும் இந்தியாவுக்கு, பிரான்ஸ் உறுதுணையாக இருக்கும் என அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோன் நம்பிக்கையூட்டியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை பிரான்ஸ் வழங்கும் எனவும் கூறியுள்ளார். கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கூறியுள்ளார். பிரான்ஸ் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் எனவும் இமானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.

click me!